அவுட் ஆகச்சொல்லி கோஹ்லியிடம் கும்பிட்டு கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்! வைரலாகும் வீடீயோ... மிஸ் பண்ணாம பாருங்க!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் போது, இந்திய வீரர் கோஹ்லியிடம் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் இமாத் வாசிம் கைகூப்பிய விவகாரம் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது. இதற்கு இந்திய அணியின் கேப்டன் கோஹ்லிதான் முக்கியக் காரணம். இந்த போட்டியைப் பொறுத்தவரை ரோகித் சர்மாவின் சதமும், கோஹ்லியின் நிதான ஆட்டமு, சேர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இந்த போட்டியில் கோஹ்லி 77 ரன்களை, 65 பந்துகளில் எடுத்திருந்தார்.

இந்நிலையில் போட்டியின் முதல் இன்னிங்சின் போது இமாத் வாசிம்.. அதாங்க பாகிஸ்தான் பந்து வீச்சாளர், அவர் இந்திய அணித்தலைவர் கோஹ்லியிடம் கெஞ்சிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடீயோ இணைப்பு கீழே..
Now I got the reason why kohli walks out without getting out.
— Dr. Batra (@hemantbatra0) June 19, 2019
Bhai ko reham aa gaya thaa :pic.twitter.com/o5Dq0rVdK4