இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த தமிழகவீரர்... அம்பத்தி ராயுடுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஷங்கர்..! Description: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த தமிழகவீரர்... அம்பத்தி ராயுடுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஷங்கர்..!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த தமிழகவீரர்... அம்பத்தி ராயுடுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஷங்கர்..!


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த தமிழகவீரர்... அம்பத்தி ராயுடுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஷங்கர்..!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை தமிழக வீரர் விஜய் ஷங்கர் பெற்று இருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

இந்திய அணியில் நான்காவதாக ஆட்டக்களம் காண வெற்றிடம் நிலவிய நிலையில், அம்பதி ராயுடுவை களம் இறக்கி சோதித்தனர். இதை பலமுறை செய்தபோதும், உலகக்கோப்பைக்கு முன்பு ஆடிய ஆட்டங்களில் அம்பதி ராயுடு சோபிக்கவில்லை. மாறாக சோதித்தார்!

இந்தசூழலில் உலகக்கோப்பை போட்டியில் நான்காவது வீரரை பூர்த்தி செய்ய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தேர்வாகினார்கள். தேர்வு குறித்து விளக்கம் அளித்திருந்த தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விஜய் சங்கர் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என மூன்று பரிணாமங்களில் (3 டி) இந்திய அணிக்கு உதவியாக இருப்பார் என சொல்லியிருந்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அம்பத்திராயுடு, அணியில் இடம்பிடித்த விஜய் சங்கரை கேலி செய்யும் வகையில், உலகக்கோப்பை ஆட்டத்தைக் காண 3 டி கண்ணாடி இப்பவே ஆர்டர் செய்து விட்டதாக ட்விட்டரில் பதிவு போட்டார். அதாவது விஜய் சங்கரை கேலி செய்யும் நோக்கத்தில் போட்டார்.

உலகக்கோப்பை தொடரில் பங்கெடுப்பதற்கு முன்னர் 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த விஜய் சங்கர், நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தன் திறனை உலகுக்கே காட்டி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். தனக்கு கிடைத்த 15 பால்களில் 15 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சிலும் கோலோச்சினார் விஜய் சங்கர்.

3டி கண்ணாடியில் மேட்ச் பார்க்கப் போவதாக சொன்ன அம்பதி ராயுடு இப்போது எந்த முகத்தோடு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பார்? தமிழன்னா சும்மாவா? விஜய் சங்கரை வாழ்த்துங்கள் நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :