திருப்பதி கோயிலில் ரகசிய தங்கக் கிணறு... அதில் அதிசயம் நிகழ்த்திய ஏழுமலையான்..! Description: திருப்பதி கோயிலில் ரகசிய தங்கக் கிணறு... அதில் அதிசயம் நிகழ்த்திய ஏழுமலையான்..!

திருப்பதி கோயிலில் ரகசிய தங்கக் கிணறு... அதில் அதிசயம் நிகழ்த்திய ஏழுமலையான்..!


திருப்பதி கோயிலில் ரகசிய தங்கக் கிணறு... அதில் அதிசயம் நிகழ்த்திய ஏழுமலையான்..!

கோவிந்தா...கோவிந்தா என்னும் கோசத்துடன் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி போய் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்த திருப்பதி கோயிலில் இருக்கும் தங்க கிணறில் இப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கேரளத்தில் பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள அறைகளைத் திறந்து பார்த்தபோது பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ஆபகரணங்கள் கிடைத்தது. அதேபோல் திருப்பதியில் ஒரு தங்கக் கிணறு இருக்கிறது. அதில் என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

திருமலையில் இருக்கும் ஏழுமலையான் கோயில் வளாகத்தில் விமான பிரகாரத்தில் ஒரு தங்க கிணறு இருக்கிறது. இந்த கிணற்றில் இருந்துதான் முன்பெல்லாம் வெங்கடேச பெருமாள் சிலைக்கு அபிசேகம் செய்து வந்தனர். இதேபோல் லட்டு தயாரிப்புக்கான தண்ணீரும் இதில் இருந்துதான் எடுக்கப்பட்டு வந்தது. இந்த கிணற்றை ஏழுமலையானுக்கு அபிசேகம் செய்யும் கிணறு என்பதால் தங்கத்தால் அலங்கரித்து வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்த கிணறு முறையற்ற பராமரிப்பு, கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேதமான தண்ணீரும் நிலத்தின் வழியே இங்கும் வந்துவிட்டதால் பாழ்பட்டு பயன்பாட்டுக்கு தகுதியற்றதாகி விட்டது. இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிணறு பயன்படுத்தப்படாமல் மூடிக் கிடக்கிறது. இதனால் ஏழுமலையானுக்கு இதில் அபிசேகமும் இல்லை. இந்நிலையில் ஒருமிகப்பெரிய ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. யாரும், எந்த முயற்சியும் எடுத்துவைக்காமல் இந்த தண்ணீர் மிகவும் நல்லநிலைக்கு மாறி இருக்கிறது. இது உலகிலேயே மிகவும் அதிசயமான ஒன்று. ஏழுமலையான் கோயிலில் நடந்த அதிசயமாக இதைக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.


நண்பர்களுடன் பகிர :