எனக்கும் அந்த வயசுல மகள் இருக்கான்னு சொன்னாரு.. மலையாளிகள் கொண்டாடும் கண்டக்டர்...ஏன் தெரியுமா? Description: எனக்கும் அந்த வயசுல மகள் இருக்கான்னு சொன்னாரு.. மலையாளிகள் கொண்டாடும் கண்டக்டர்...ஏன் தெரியுமா?

எனக்கும் அந்த வயசுல மகள் இருக்கான்னு சொன்னாரு.. மலையாளிகள் கொண்டாடும் கண்டக்டர்...ஏன் தெரியுமா?


எனக்கும் அந்த வயசுல மகள் இருக்கான்னு சொன்னாரு.. மலையாளிகள் கொண்டாடும் கண்டக்டர்...ஏன் தெரியுமா?

கேரள பத்தனம்திட்டா மாவட்டத்தின் பொழிஞ்சேரி அருகே உள்ள அறங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தனியார் பேருந்து ஒன்றில் கண்டக்டராக இருக்கிறார். இவரை கேரளத்தில் சமூகவலைதளங்களில் இப்போது கொண்டாடி வருகின்றனர். அப்படி என்ன செய்தார் இந்த கண்டக்டர்? அதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொழிஞ்சேரி பகுதியை சேர்ந்த சூரியா என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளிஒன்றில் ஏழாம்வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பொழிஞ்சேரியில் இருக்கும் பள்ளிக்கு போய் விட்டு செங்கனூர் பேருந்தில் ஏறுவார் சூர்யாவின் மகள். வழியில் வரும் அறங்குளத்தில் இறங்கி தன் வீட்டுக்குச் செல்வார். ஆனால் அன்று சிறுமி தவறுதலாக பத்தனம்திட்டா பேருந்தில் ஏறிவிட்டார்.

அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த சந்தோஷ், அந்த சிறுமியிடம் எங்க போகணும்ன்னு கேட்க, அறங்குளம் என்று சொன்னார் சிறுமி. உடனே அந்த பேருந்து போகாது என்று சொன்ன, கண்டக்டர் அடுத்து வந்த பஸ் ஸ்டாண்டில் அவரும் குழந்தையோடு இறங்கினார். சிறுமியிடம் இருந்து அவரது அப்பாவின் போன் நம்பர் வாங்கி, அவரிடமும் பேசினார். அந்த சிறுமியின் தந்தை வரும்வரை காத்திருந்தார் கண்டக்டர்.

அந்த சிறுமியின் தந்தை வந்த பின்புதான் அவரிடம் சிறுமியை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் சந்தோஷ். இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை சூரியா தன் முகநூல் பக்கத்தில் பதிவிட அது இப்போது வைரலாகி உள்ளது. அந்தபதிவில், ‘’சாதாரணமாக இப்படி யாராவது பேருந்து மாறி ஏறிவிட்டால் அவர்களை வழியிலேயே இறக்கிவிட்டு செல்வதைப் பார்த்திருப்போம். ஆனா, சந்தோஷ் என் மகளை என்னிடம் இறக்கி விட்டு காத்திருந்து விட்டுச் சென்றார்.

அந்த நேரத்தில் என்னால் அவருக்கு நன்றிகூட சொல்ல முடியல. கொஞ்சநேரம் கழிச்சு சந்தோஷ்க்கு போன் பண்ணி நன்றி சொன்னேன். அதுக்கு அவர் எனக்கும் ஒரு மகள் இருக்காங்க. அவளைப் போல்தான் உங்க மகளையும் பார்த்தேன்னு சொன்னாரு”என பதிவிட்டிருக்கிறார் சூரியா.


நண்பர்களுடன் பகிர :