கட்டிப்பிடித்து, நடனமாடி கற்றலைத் தூண்டும் ஆசிரியை... வித்யாச முயற்சியால் படிக்க தூண்டும் டீச்சர்..! Description: கட்டிப்பிடித்து, நடனமாடி கற்றலைத் தூண்டும் ஆசிரியை... வித்யாச முயற்சியால் படிக்க தூண்டும் டீச்சர்..!

கட்டிப்பிடித்து, நடனமாடி கற்றலைத் தூண்டும் ஆசிரியை... வித்யாச முயற்சியால் படிக்க தூண்டும் டீச்சர்..!


கட்டிப்பிடித்து, நடனமாடி கற்றலைத் தூண்டும் ஆசிரியை... வித்யாச முயற்சியால் படிக்க தூண்டும் டீச்சர்..!

பொதுவாகவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வெறுமனே சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வார்கள் என்பது பலரது கருத்து.

அதை பல ஆசிரியர்களும் மாற்றி அமைத்து நிரூபித்துக் காட்டுகின்றனர். அந்த வகையில் ரொம்பவும் வித்யாசமானவர் சுபாஷினி டீச்சர்.

புதுச்சேரி நேனாங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் சுபாஷினி. வகுப்புக்கு வந்தோம் பாடம் எடுத்தோம்...என்பதுபோல் இல்லாமல் தன்னிடம் படிக்கும் குழந்தைகளிடம் ஒரு தாயைப் போல் பாசம் காட்டுகிறார் சுபாஷினி.

அதிலும் வெறுமனே கற்பிப்பது மட்டும் அல்லாமல் அவரிடம் பயில்பவர்களின் தனித்துவமான திறன்களை யும் கண்டுபிடித்து ஊக்குவிக்கும் வேலையைச் செய்கிறார் சுபாஷினி.

மேலும் மாணவர்கள் வகுப்புக்கு வந்த உடன் டீச்சர் அட்டன்ஷ் எடுப்பது வழக்கமான ஒன்று. சுபாஷினி டீச்சர் அதையும் வித்யாசமாக செய்கிறார். மாணவ, மாணவிகள் வகுப்புக்கு உள்ளே வந்தவுடன் டீச்சர் முன்பு வரிசையில் நிற்கிறார்கள்.

டீச்சர் முன்பு ஒரு நோட்டீஷ் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதில் சில படங்கள் இருக்கிறது. அவை செயல்கள். மாணவர்கள் வந்து அவற்றை தொடுகின்ரனர். அவர்கள் கட்டிப்பிடிக்கும் ஓவியத்தைத் தொட்டால் ஆசிரியர் மாணவ, மாணவிகளை பாசத்தோடு கட்டி பிடித்து வகுப்புக்கு உள்ளே அனுப்புகிறார். சில குழந்தைகள் நடனத்தைத் தொட அவர்களோடு சேர்ந்து ஆடுகிறார் ஆசிரியை.

வீடியோவைப் பாருங்கள்... மாணவர்களுக்கு கல்வி ஞானத்தை இப்படியும் தூண்டும், அவர்களை அன்னை போல் அரவணைக்கும் இந்த ஆசிரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

வீடீயோவைப் பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :