திருநம்பியை கைப்பிடித்த திருநங்கையின் காதல் நினைவலைகள்... காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம் என நெகிழ்ச்சி..! Description: திருநம்பியை கைப்பிடித்த திருநங்கையின் காதல் நினைவலைகள்... காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம் என நெகிழ்ச்சி..!

திருநம்பியை கைப்பிடித்த திருநங்கையின் காதல் நினைவலைகள்... காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம் என நெகிழ்ச்சி..!


திருநம்பியை கைப்பிடித்த திருநங்கையின் காதல் நினைவலைகள்... காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம் என நெகிழ்ச்சி..!

கேரளத்தை சேர்ந்த திருநங்கை திருப்தி ஷெட்டி, திருநம்பி ஹிரித்திக் என்பவரை காதலித்து கைப்பிடித்துள்ளார். இதுகுறித்து திருநங்கை திருப்தி ஷெட்டி கூறுகையில், ‘’என்னோட சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள பெண்மையை உணர ஆரம்பிச்சேன். 6ம் கிளாஸோட படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்குப் போயிட்டேன். வீட்டுலயும் யாரும் என்னை புரிஞ்சுக்கல. ஒருகட்டத்துக்கு மேல் குடும்பத்தினர் புறக்கணிச்சதால, வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகள் சமூகத்தோட சேர்ந்தேன்.

ரெஞ்சு அம்மான்னு ஒரு திருநங்கை தான் என்னை தத்தெடுத்து வளத்தாங்க. அப்புறம் தொடர்ந்து ஆப்ரேசனும் செஞ்சேன். அப்போ இருந்தே மன உறுதியோட இருந்தேன். சொந்தமாக கைவினைப் பொருள்கள் ஆடைகளை விற்பனை செய்றேன். கேரளத்தில் முதல் திருநங்கை தொழில் முனைவோருன்னும் பட்டம் வாங்கிருக்கேன்.

இப்போ ஸ்கூல், காலேஜ்க்கு மோட்டிவேசன் ஸ்பீக்கராவும் போயிட்டு இருக்கேன். பிளே ஸ்டோர்ல கூட என்னோட கைவினைப் பொருள்களை விக்குறதுக்கு ஒரு ஆப் ஓப்பன் பண்ணி இருக்கேன்.

போன வருசம் ஒரு கண்காட்சியில் தான் ஹிரித்திக்கை பார்த்தேன். அப்பவே அவர் காதலை சொன்னாரு. நான் நல்ல நிலைக்கு போகணும், முன்னேறனும், நிறைய சம்பாதிக்கணும்ன்னு லட்சியங்கள் வைச்சுருந்ததால காதலை பத்தி யோசிக்கல. ஆனா, ஹிரித்திக் என்னை தத்தெடுத்து இருந்த்ச் ரெஞ்சும்மாகிட்ட வந்து பொண்ணு கேட்டாங்க. ஹிரித்திக்கும் என்னை மாதிரி பெத்தவங்க கைவிட்டவரு தான். அவரே சுயமா சம்பாதிச்சு ஆப்ரேசனும் பண்ணிருக்காரு. அதனால எனக்கு அவர் மேல மரியாதையும் இருந்துச்சு. உடனே சம்மதிச்சுட்டேன்.

எங்க மேரேஜ்க்கு நடிகர் ஜெயசூரியா உள்ளிட்ட செலிபிரேட்டீஸ் வந்தது ஹேப்பியா இருந்துச்சு”என்று காதல் கதையை சொல்கிறார் திருப்தி ஷெட்டி.


நண்பர்களுடன் பகிர :