கிரிக்கெட் மேட்ச் ரத்து... வானத்தைப் பார்த்து கைகூப்பி கெஞ்சிய இந்திய அணி வீரர்: காரணம் தெரியுமா? Description: கிரிக்கெட் மேட்ச் ரத்து... வானத்தைப் பார்த்து கைகூப்பி கெஞ்சிய இந்திய அணி வீரர்: காரணம் தெரியுமா?

கிரிக்கெட் மேட்ச் ரத்து... வானத்தைப் பார்த்து கைகூப்பி கெஞ்சிய இந்திய அணி வீரர்: காரணம் தெரியுமா?


கிரிக்கெட் மேட்ச் ரத்து... வானத்தைப் பார்த்து கைகூப்பி கெஞ்சிய இந்திய அணி வீரர்: காரணம் தெரியுமா?

இந்திய அணியில் கிரிக்கெட் வீரர் கைகூப்பி கும்பிட்டபடியே பேசும் வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18வது லீக் இந்தியா_நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்க இருந்தது. கடந்த இருநாள்களாகவே நாடிங்ஹாமில் மேகமூட்டத்துடன் இருந்த கிளைமேட் இன்று போட்டி துவங்குவதற்கு முன்பே மழையாக பொழியத் துவங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதமானது.

சிறிதுநேரத்தில் மழை நின்றது. அப்போது மேட்ச் நடத்த சாதகமான சூழல் இருக்கிறதா என நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு செய்தனர். ஆனால் கொஞ்சநேரத்திலேயே மழை பெரிதானது. இதனால் நடுவர்கள் போட்டியை ரத்து செய்தனர்.

இந்த சூழலில் போட்டி நடக்க இருந்த நாடிங்ஹாம் மைதானத்தில் இந்திய அணியின் வீரர் கேதர் ஜாதவ் வருண பகவானிடம் கைகூப்பி கும்பிடும் வீடீயோ வைரலாகி வருகிறது. அதில், ‘’கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு செய்வதற்கு பதிலாக இந்தியாவில் வறட்சி நிலவும் தன் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவுக்கு செல்லும்மாறு கூறிய அவர், என் மாநில மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவை. இங்கு வீணாக கொட்டித் தீர்ப்பதற்கு பதில், அங்கு பெய்தால் இப்போது மக்களின் பயன்பாட்டுக்கு வெறும் 7 சதவிகிதம் மட்டுமே உள்ள நீரின் அளவு உயரும்.”என பேசி இருக்கிறார். இந்த வீடீயோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :