என்று தணியும் இந்த கட்டண கொள்ளை? காக்கி உடையில் ஒரு கண்ணீர் கதை... மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்த பரிதாபம்...! Description: என்று தணியும் இந்த கட்டண கொள்ளை? காக்கி உடையில் ஒரு கண்ணீர் கதை... மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்த பரிதாபம்...!

என்று தணியும் இந்த கட்டண கொள்ளை? காக்கி உடையில் ஒரு கண்ணீர் கதை... மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்த பரிதாபம்...!


என்று தணியும் இந்த கட்டண கொள்ளை? காக்கி உடையில் ஒரு கண்ணீர் கதை... மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்த பரிதாபம்...!

தங்கள் பிள்ளைகள் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவாகவும், தாங்கள் நல்ல பள்ளியில் படித்து பெற்றோரை நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பது குழந்தைகளின் கனவாகவும் இருக்கிறது. ஆனால் இவை இரண்டுக்குமே முட்டுக்கட்டை போடும் இடத்தில் இருக்கிறது கட்டண கொள்ளை.

அந்த வகையில் நாகப்பட்டிணத்தில் மகனின் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரெட் திரைப்படத்தில் வரும் கண்ணை கசக்கும் சூரியனும் பாடலில் கலைமகள் தனது வீனையை விற்பனை செய்து கல்விக் கட்டணம் செலுத்துவதாக ஒரு வரி வரும். அது வெறுமனே வார்த்தை அல்ல. உணர்வு பூர்வமான வலி என அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இதுவும் அப்படித்தான். நாகப்பட்டிணத்தில் நகைத் தொழிலாளி யாக இருந்தவர் செந்தில்குமார் (34) இவரது மனைவி லெட்சுமி. இவர்களுக்கு 11 வயதில் ஜெகதீஷ்வரன் என்ற மகன் இருந்தார்.

வீட்டின் அருகில் இருந்த தனியார் பள்ளி ஒன்றில் ஜெதீஷ்வரன் 6ம் வகுப்பு படித்து வந்தான். தமிழகம் முழுவதும் பத்து நாள்களுக்கு முன்னர் பள்ளிகூடம் திறந்தது. அதேபோல் ஜெகதீசின் பள்ளியும் திறந்தது. ஆனால் பள்ளியில் பீஷ் கட்டாததால் ஜெகதீஷ்வரன் பள்ளிக்கு செல்லவில்லை. கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்லி தன் அப்பாவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தான் ஜெகதீஷ்வரன்.

செந்தில்குமாருக்கோ நகைத் தொழிலில் போதிய வருமானம் இல்லை. ஏற்கனவே பலரிடமும் கடன் வாங்கி வைத்திருப்பதால் புதிதாக யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. ஜெகதீஷ்வரன் நன்றாக படித்து காவலர் ஆக வேண்டும் என விரும்பியவன். ஆனால் அதற்கு பொருளாதார தடை முட்டுக்கட்டை போடுவதை எண்ணி தன் மனைவியிடம் புலம்பி வந்திருக்கிறார் செந்தில்குமார்.

இந்நிலையில் தான் வழக்கமாக வேலைக்கு செல்லும் நகை பட்டறைக்கு நேற்று செந்தில் செல்லவில்லை. இதனால் அவரது உரிமையாளர் வந்து பார்த்த போது மூவரும் சடலமாகக் கிடந்தனர். அதிலும் தன் மகன் ஆசைப்பட்ட போலீஷ் சீருடை யை அவனுக்கு கொடுத்திருக்கிறார் செந்தில். சிறுவன் ஜெகதீஷ்வரன் அந்த காக்கி உடையோடு அம்மாவின் மடியில் செத்துக் கிடந்தான்.

இன்னும் எத்தனை உயிர்களை குடிக்கப் போகிறது இந்த கல்வி கட்டண கொள்ளை?


நண்பர்களுடன் பகிர :