மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் உயிரை மாய்த்து கொண்ட தந்தை... கண்கலங்க வைத்த காரணம்…! Description: மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் உயிரை மாய்த்து கொண்ட தந்தை... கண்கலங்க வைத்த காரணம்…!

மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் உயிரை மாய்த்து கொண்ட தந்தை... கண்கலங்க வைத்த காரணம்…!


 மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் உயிரை மாய்த்து கொண்ட தந்தை... கண்கலங்க வைத்த காரணம்…!

ஊரே கூடி வீட்டில் இருக்கிறது. இல்லம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. தன் ஆசை மகளுக்கு அன்று தான் திருமணம். அதை உற்சாகமாக கொண்டாட சொந்த,பந்தங்கள் திரண்ட அதேநாளில் தூக்குபோட்டு தற்கொலை செய்து தன் வாழ்வை முடித்திருக்கிறார் ஒரு தந்தை. இது கேரளத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத். இவரது மகள். நீதுவுக்கு சாத்தனூர் பகுதியில் இருக்கும் ஆனந்த விலாசம் பகவதி கோயிலில் வைத்து திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்துக்கு மகளுக்கு சில நகைகளை போடுவதாக தனது மகளுக்கும், மணமகன் வீட்டாருக்கும் வாக்கு கொடுத்திருந்தார் சிவபிரசாத். இதற்காக தனது வீடு, சில நிலபுலன்களையும் விற்க முடிவு செய்தார் சிவபிரசாத்.

ஆனால் அந்த முயற்சிகள் நிறைவேறவில்லை. அவரும் விடாமுயற்சியுடன் முயன்று கொண்டிருந்தார். இதனிடையே வங்கியில் வாங்கியிருந்த கடனுக்காக அவரது வீட்டை ஜப்தி செய்வதற்கான ஆலோசனை செய்ய வங்கி அதிகாரிகள் அவர் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். இதை கல்யாண வேலையில் இருந்த சிவபிராசத்திடம் உறவினர்கள் சொல்ல மிகுந்த மனவேதனை அடைந்தார்.

இந்நிலையில் திருமண நாளன்று காலையில் தனது பூர்வீகமான பழைய வீட்டுக்கு காலையில் சென்ற சிவபிரசாத், பாத்ரூமில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். உறவுகள் சேர்ந்து தந்தை தற்கொலை செய்த விசயத்தையே சொல்லாமல், மகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். மாப்பிள்ளை வீட்டார் சிவபிரசாத்தின் சூழல் அறிந்து, நகைகள் போடாவிட்டாலும் பரவாயில்லை எனக் கூறியிருந்த நிலையிலும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத விரக்தியில் உயிரை விட்டுள்ளார் சிவபிரசாத்!

இந்த சம்பவம் கேரளத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, வங்கி அதிகாரிகள் மனிதர்களின் சூழல்களை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் குரல்கள் கேட்கிறது.


நண்பர்களுடன் பகிர :