சொந்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகன்.. சொன்ன காரணம் என்ன தெரியுமா? Description: சொந்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகன்.. சொன்ன காரணம் என்ன தெரியுமா?

சொந்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகன்.. சொன்ன காரணம் என்ன தெரியுமா?


சொந்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகன்..   சொன்ன காரணம் என்ன தெரியுமா?

கேரளத்தைச் சேர்ந்த 23வயது வாலிபர் ஒருவர், தன்னை பெற்று வளர்த்த அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

கேரளத்தின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். கம்யூனிஸ்ட் கட்சிக்காரரான இவர், இன்ஜினியரிங் படித்தவர். படிப்பு முடிந்து கோகுல் வேலைக்குப் போய்விட, ஆசிரியையாக இருந்த அவனது அம்மா தனிமையில் இருப்பதாக உணர்ந்தார் கோகுல். தன் தந்தையை பிரித்து வாழ்ந்த தாய், சிறுவயதில் இருந்தே தன்னை கேர் எடுத்துப் பார்த்துக்கொண்ட தாய்க்கு கோகுல் தனிமையில் இல்லாமல் இருக்க இப்போது திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதுதொடர்பாக கோகுல், ’’அம்மாவின் முதல் திருமணம் திருப்தியாக இல்லை. ஒருமுறை தலையில் அப்பா அடித்தார். ரத்தம் வடிந்த நிலையில் அம்மா உனகாகத்தான் தாங்கிட்டு இருக்கேன்னு சொன்னார். எனது ஸ்கூல் ஸ்டேஜிலேயே அப்பாவை பிரிஞ்சு, நானும், அம்மாவும் தனியா வந்துட்டோம். அப்போ இருந்தே அம்மா தான் எனக்கு எல்லாம். எனக்காக அவுங்க லைபையே மிஸ் பண்ணிருக்காங்க. இப்போ நான் வளந்ததும் அம்மாவுக்கு ஒரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க நினைச்சேன். அம்மா முதல்ல சம்மதிக்கல. அப்புறம் ப்ரண்ட்ஸ் பேசுனதும் ஒத்துகிட்டாங்க.

இந்த சமூகத்தில் செகண்ட் மேரேஜே பெரிய குத்தமா பார்க்குறாங்க. அதை இது மாத்தும்ன்னு நம்புறேன். “என்று சொல்கிறார் கோகுல். இச்சம்பவத்தை அவர் தனது பேஸ்புக்கிலும் போட கேரளத்தில் இது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :