கண்ணீர் சிந்திய தன் கடைசி ஓவியத்துடன் விடை பெற்ற சிறுவன்... சோகத்தில் மூழ்கிய இலங்கை...! Description: கண்ணீர் சிந்திய தன் கடைசி ஓவியத்துடன் விடை பெற்ற சிறுவன்... சோகத்தில் மூழ்கிய இலங்கை...!

கண்ணீர் சிந்திய தன் கடைசி ஓவியத்துடன் விடை பெற்ற சிறுவன்... சோகத்தில் மூழ்கிய இலங்கை...!


கண்ணீர் சிந்திய தன் கடைசி ஓவியத்துடன் விடை பெற்ற சிறுவன்... சோகத்தில் மூழ்கிய இலங்கை...!

ஒட்டுமொத்த இலங்கையின் பிரார்த்தனை குரலுக்கும் இறைவன் செவி சாய்க்கவில்லை என ஆதங்ககுரல்கள் கேட்கிறது. கடுமையான பிரார்த்தனை, இலங்கை மக்களின் உதவிக்கு இடையில் இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிர் இழந்த சம்ப்வம் இலங்கை மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்யாலயத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவனேசன் விதுசன். சிறுவயதில் இருந்தே இந்த சிறுவன் பல்வேறு திறமைகளை கொண்டு இருந்தார். ஓவியங்கள் வரைந்தால் அவை அப்படியே உருவம் பெற்று நம் கண் முன்னால் நிற்பது போல் வசீகரிக்கும். இவனது திறமைக்கு இவன் படித்த பள்ளியும் நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்து வந்தது.

எல்லாரையும் போல சிவநேசனுக்கும் வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் போனது. ஆனால் திடீரென அவன் வாழ்வில் சூறாவளி அடித்தது. இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டான் சிவனேசன். இலங்கையில் அவன் சிகிட்சை பெற்று வந்தான்.

தொடர் சிகிச்சை செய்ய லட்சக்கணக்கான பணம் தேவைப்பட்டது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிவனேசனின் குடும்பத்தால் மருத்துவச் செலவை சமாளிக்க முடியவில்லை.

தமிழ் மத்திய மகா வித்யாலயத்தின் முன்னாள் மாணவர்கள் 16 லட்ச ரூபாய் மருத்துவ செலவுக்காக பிரித்து கொடுத்தனர். இதேபோல் சிறுவன் சிவநேசன் குறித்து சோசியல் மீடீயாக்கலில் அதிக அளவில் பரவியது.

திறமை வாய்ந்த அந்த சிறுவன் நலம் பெற வேண்டி சாதி, மதங்கள்கடந்து அனைவரும் பிரார்த்திக்க துவங்கினர். ஒருகட்டத்தில் உயர் சிகிட்சைக்காக சிறுவனை இந்தியாவுக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தங்கி சிறுவன் சிகிட்சை பெற்று வந்தான். பூரண நலன் பெற்று இலங்கை திரும்புவான் என பலரும் எதிர்பார்த்த நிலையில் சிகிட்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தான். சிகிட்சையில் இருந்த போது கடைசியாக சிவனேசன் ஒரு ஓவியம் வரைந்தான். அதில் பெண் ஒருவர் கண்ணீர் சிந்தி அழுவது உருவ வைக்கிறது. இப்போது சிவனேசனின் மரணத்துக்கு ஒட்டுமொத்த இலங்கையிம் இப்படித்தான் அழுது கொண்டு இருக்கிறது.

தன் இறப்பை யூகித்தே சிவனேசன் இப்படியான ஓவியத்தை வரைந்திருக்க வேண்டும் என கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டிருக்கும் இலங்கை வாசிகள் சிவனேசன் நினைப்பில் உருகுகின்ரனர்


நண்பர்களுடன் பகிர :