மெர்சல் படத்தில் மகனாக நடித்த சிறுவனுக்கு... இளையதளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...! Description: மெர்சல் படத்தில் மகனாக நடித்த சிறுவனுக்கு... இளையதளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...!

மெர்சல் படத்தில் மகனாக நடித்த சிறுவனுக்கு... இளையதளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...!


மெர்சல் படத்தில் மகனாக நடித்த சிறுவனுக்கு...  இளையதளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...!

நிஜத்தில் படு அமைதியாக இருக்கும் இளையதளபதி விஜய், கேமரா முன்பு என்றால் அதகளம் செய்து விடுவார். தன்னுடன் படங்களில் நடிப்பவர்களின் பிறந்தநாளை நினைவு வைத்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதில் தளபதியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடிகர் விஜய் தனது கார் டிரைவரின் மகள் பரீட்சையில் பாஸானதற்கு ஹிப்ட் கொடுப்பது போல் காட்சி இருக்கும். அதுதான் தளபதியின் ஒரிஜினல் குணமே! தன் மனதுக்கு பிடித்தவர்களின் பிறந்தநாளை உச்ச நடிகரான அவர் நினைவு வைத்து வாழ்த்துவதும், கிப்ட் கொடுத்து அசத்துவதும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரியும்.

தளபதி இப்போது அட்லீ இயக்கத்தில் கால்பந்தை மையமாகக் கொண்ட படம் ஒன்றில் நடித்து வருகிறார். தன்னோடு மெர்சல் படத்தில் தன் மகனாக நடித்த அக்‌ஷாந்திற்கு அண்மையில் பிறந்தநாள் வந்தது.

அந்த சிறுவனின் பிறந்தநாளை நினைவில் வைத்து சர்ப்ரைஸ் கிப்டாக அவனுக்கு சிறிய கேமரா ஒன்றை பரிசாக கொடுத்து மகிழ்வித்துள்ளார் தளபதி. இந்த படம் இப்போது இணையத்தில் தளபதி ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.


நண்பர்களுடன் பகிர :