இறப்பதற்கு முன்பு கிரேசி மோகன் என்ன சொன்னார் தெரியுமா? Description: இறப்பதற்கு முன்பு கிரேசி மோகன் என்ன சொன்னார் தெரியுமா?

இறப்பதற்கு முன்பு கிரேசி மோகன் என்ன சொன்னார் தெரியுமா?


இறப்பதற்கு முன்பு கிரேசி மோகன் என்ன சொன்னார் தெரியுமா?

கிரேசி மோகன் நேற்று மரணம் அடைந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும்கூட அவரது ரசிகர்கள் மீண்டு வரவில்லை. இந்நிலையில் இறப்புக்கு சிறிது நேரத்துக்கு முன்பு அவர் தனது சகோதரர் பாலாஜியிடம் எதார்த்தமாக பேசிய விசயம் இன்னும் கூட சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடக நடிகர், சிறந்த வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்திரன் கொண்டவர் கிரேசி மோகன். நடிகர் கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு அவர் தான் வசனகர்த்தா. இந்த இருவர் கூட்டணி வெற்றி கூட்டணியாக ரசிகர்களால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டது.

அதனால் தான் கிரேசி மோகனுக்கு இரங்கல் தெரிவித்து கமல் வெளியிட்ட அறிக்கையில் கூட சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்று சொல்லலாம் என கிரேசிமோகன் சொல்லும் அளவுக்கு எங்கள் நட்பு, நெருக்கம் இருந்தது என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

நேற்று மதியம் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த கிரேசி மோகன், காலையில் தன் சகோதரர் பாலாஜியிடம் வீட்டில் யதார்த்தமாக இருந்து பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, வந்த வேலை முடிந்தால் அனைவரும் புறப்பட்டு விட வேண்டியது தான். விவேகானந்தர், பாரதியார் எல்லாம் குறைந்த வயது தான் இருந்தார்கள்.. என சொல்லியிருக்கிறார்.

இதை அவர் யதார்த்தமாக சொன்ன அன்று மதியமே உயிர் இழந்துவிட்டார். அவர் இப்படிச் சொன்னதை இப்போது நடிகர் எஷ்.வி.சேகர் வெளியிட்டு உள்ளார்.


நண்பர்களுடன் பகிர :

S
Srinivasan 9மாதத்திற்கு முன்
yadhaarththamaa vasanam varuvadhupola intha words also came from ???????????with tears skv