அன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம்! ஒரு சாமானியன் சாதனையாளனான கதை..! Description: அன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம்! ஒரு சாமானியன் சாதனையாளனான கதை..!

அன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம்! ஒரு சாமானியன் சாதனையாளனான கதை..!


அன்று பஸ்ஸாண்டில் உறக்கம்... இன்று இவர் குரலுக்கு தமிழகமே மயக்கம்! ஒரு சாமானியன் சாதனையாளனான கதை..!

தன் இசைக்கனவை நிறைவேற்ற வீட்டை விட்டு, ஓடி வந்து பஸ் ஸ்டாண்டில் படுத்து உறங்கி போராடிய இளைஞர் ஒருவரின் வாழ்க்கை மற்றவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை விதைக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் என்னும் சின்னஞ்சிறிய கிராமத்தைச் சேர்ந்த அருள்பிரகாசம் இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியில் பாடி வருகிறார். இவர் குரலுக்கு போட்டியின் நடுவர்கள் தொடங்கி, கடைக்கோடி ரசிகர்கள் வரை பலரும் மயங்கிப் போய் உள்ளனர். இந்த அருள்பிரகாசம் முதன் முறையாக தன் வாழ்க்கைக் கதையை வெளிப்படுத்தி உள்ளார். இதுபலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் விசயமாக உள்ளது.

அருள்பிரசாசம், சிதம்பரவள்ளி என இரு பிள்ளைகளை பெற்றவர் ராமலிங்கம். அவருக்கோ பிள்ளைகள் நன்றாக படித்து குடும்பத்தை உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே பெருங்கனவு. அருளும் சிவில் படிப்பில் டிப்ளமோ படித்திருந்தான். ஆனால் சின்ன வயதில் இருந்தே மனம் முழுவதும் இசையை சுமந்த அருளுக்கு படித்த படிப்புக்கான வேலைக்கு செல்ல மனம் இல்லை. மனம் முழுவதும் இசைத்துறையில் சாதிக்கவே ஏங்கியது. குறிப்பாக நல்ல பாடகராக வரவேண்டும் என்பதே கனவு.

ஆனால் தந்தை ராமலிங்கமோ, இசையை சாப்பாட்டுக்கு வைத்துகொள்ளும் பொறியல் போல் வைத்துக்கொள். அதையே சாப்பாடாக்க நினைக்காதே...நாம் மிடில்கிளாஸ் என சொல்லியுள்ளார். ஆனால் தன் லட்சிய இலக்குக்காக வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் அரியலூரில் இருந்து பேருந்து ஏறி சென்னைக்கு வந்துவிட்டார் அருள் பிரகாசம். அவர் கண்கள் எல்லாம் தன் லட்சியம் மட்டுமே தெரிந்துள்ளது.

சென்னைக்கு சென்றவருக்கு நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு கூட செல்லத் தெரியவில்லை. மூன்றுநாள்கள் பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்கி இருக்கிறார். சாதிக்க வேண்டும் என்னும் லட்சியத்தோடு வந்த இந்த இளைஞர் பல நாள்கள் சாப்பிடாமல் கூட படுத்திருக்கிறார். நண்பர்கள் தான் அவருக்கு முதுகெழும்பாக இருந்திருக்கின்றனர். இப்போது சரிகமப நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதுக்கும் அருள்பிரகாசத்தை தெரிகிறது.

இப்போதாவது தன் அப்பா ராமலிங்கம் தம்பி அருள்பிரகாசத்தை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்க வேண்டும் என உருகியுள்ளார் அவரது சகோதிரி சிதம்பர வடிவு. வீடீயோ பாருங்க..உங்களுக்கும் தன்னம்பிக்கை ஏறும்!


நண்பர்களுடன் பகிர :