சிறுமைபடுத்துவதை விட்டுவிட்டு கைதட்டி ஊக்குவியுங்கள்.. கிரிக்கெட் ரசிகர்களை நெகிழவைத்த விராட்கோலி...! Description: சிறுமைபடுத்துவதை விட்டுவிட்டு கைதட்டி ஊக்குவியுங்கள்.. கிரிக்கெட் ரசிகர்களை நெகிழவைத்த விராட்கோலி...!

சிறுமைபடுத்துவதை விட்டுவிட்டு கைதட்டி ஊக்குவியுங்கள்.. கிரிக்கெட் ரசிகர்களை நெகிழவைத்த விராட்கோலி...!


 சிறுமைபடுத்துவதை விட்டுவிட்டு கைதட்டி ஊக்குவியுங்கள்..  கிரிக்கெட் ரசிகர்களை நெகிழவைத்த விராட்கோலி...!

இன்று கிரிக்கெட் ரசிகர்கள் இதய சிம்மாசனத்திலேயே கம்பீரமாக அமர்ந்துவிட்டார் கோலி. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தே வந்து தோளில் தட்டிக் கொடுக்கும் அளவுக்கு மனிதத்துவமான ஒரு செயலைச் செய்தார் கோலி. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

இந்தியா_ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் 36 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து, இந்திய அணி 2வது வெற்றியைப் பெற்றது. மைதானத்தில் இந்த ஆட்டம் நடந்தபோது திரளாக குவிந்திருந்த ரசிகர்கள் தங்களது அணியையும், தங்களுக்கு பிடித்த வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கோலிக்கு ஆதரவாகவும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்தை அசிங்கப்படுத்தும் வகையில் கூச்சல் சப்தம் போட்டனர். இதைக் கவனித்த இந்திய கேப்டன் விராட்கோலி, ரசிகர்களை நோக்கி, ஸ்மித்தை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். கோலி இப்படிச் சொல்வதைப் பார்த்த ஸ்மித், மைதானத்திலேயே கோலியின் முதுகில் தட்டிக் கொடுத்து தன் நன்றியை பகிர்ந்துகொண்டார்.

இதுபற்றி விராட் கோலி கருத்து தெரிவிக்கையிலும், ’’என்றோ ஏதோ நடந்துவிட்டது. அவர், அவர் அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார். பழைய கதையை கிளறி அவரை சிறுமைப்படுத்தக் கூடாது” என மனிதத்துவத்தோடு கூறியிருக்கிறார். இந்த வீடீயோ இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :