நடிகை ரோஜாவுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை? ஆந்திராவில் எம்.எல்.ஏவாக ஜெயித்த ரோஜாவுக்கு பதவி கிடைக்காத பிண்ணனி இதுதான்! Description: நடிகை ரோஜாவுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை? ஆந்திராவில் எம்.எல்.ஏவாக ஜெயித்த ரோஜாவுக்கு பதவி கிடைக்காத பிண்ணனி இதுதான்!

நடிகை ரோஜாவுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை? ஆந்திராவில் எம்.எல்.ஏவாக ஜெயித்த ரோஜாவுக்கு பதவி கிடைக்காத பிண்ணனி இதுதான்!


நடிகை ரோஜாவுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை?  ஆந்திராவில் எம்.எல்.ஏவாக ஜெயித்த ரோஜாவுக்கு பதவி கிடைக்காத பிண்ணனி இதுதான்!

தமிழ்த்திரைப்படங்களில் நாயகியாக முத்திரை பதித்தவர் நடிகை ரோஜா. அரசியல் ஆர்வம் கொண்ட இவர் ஆந்திரா பக்கம் ஒதுங்கினார். ஒய்,எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏவாக அண்மையில் தேர்வான இவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் பிண்ணனி இப்போது வெளியாகி இருக்கிறது.

ஆந்திர முதல்வராக தனது தந்தை இரண்டாவதுமுறையாக பதவியேற்ற சில தினங்களிலேயே ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தது எம்.பி.ஏ படித்த ஜெகன் மோகன் ரெட்டியை நிலைகுலைய வைத்தது. இருமுறை முதல்வராக இருந்த தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் மரணத்துக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் பிணக்கம் ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறி கடந்த 2010ல் புதிய கட்சித் துவங்கினார் ஜெகன்மோகன் ரெட்டி.

இந்தமுறை மெகா வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்துவிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி. தனது ஆட்சியில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்களையும் நியமித்து புரட்சி செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்தியாவிலேயே ஒரே மாநிலத்தில் 5 துணை முதல்வர்கள் இருப்பது இதுவே முதல்முறை.

இதில் ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஜாவுக்கு அது வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் இப்போது வெளியாகி உள்ளது.

‘’தனது அமைச்சரவையில் அனைத்து சமூகத்துக்கும் விகிதாச்சார அடிப்படையில் சமமாக இடமளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி. அனைத்து சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவே, இந்தியாவிலேயே முதன் முறையாக 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நடிகை ரோஜா ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர். ஏற்கனவே ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாக இருக்கும் நிலையில், ஐந்தாவதாக நடிகை ரோஜாவையும் நியமித்தால் சமூக ஏற்றத்தாழ்வை கற்பித்ததாக ஆகிவிடும். மேலும் அது சமூகநீதிக்கும் ஆபத்து.என்று தான் ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கவில்லையாம்.

இத்தனைக்கும் நடிகை ரோஜாவும், ஜெகன்மோகன் ரெட்டியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் கூட ஜெகன் மோகன் ரெட்டியின் நியாயமான பேச்சு, அனைவரையும் கவர்ந்திருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :