இரு தூணுக்கு இடையே சிக்கிக் கொண்ட சிறுவன்... சாமர்த்திய சாதுர்யமாய் மீட்ட தீயணைப்புவீரர்கள்..! Description: இரு தூணுக்கு இடையே சிக்கிக் கொண்ட சிறுவன்... சாமர்த்திய சாதுர்யமாய் மீட்ட தீயணைப்புவீரர்கள்..!

இரு தூணுக்கு இடையே சிக்கிக் கொண்ட சிறுவன்... சாமர்த்திய சாதுர்யமாய் மீட்ட தீயணைப்புவீரர்கள்..!


இரு தூணுக்கு இடையே சிக்கிக் கொண்ட சிறுவன்... சாமர்த்திய சாதுர்யமாய் மீட்ட தீயணைப்புவீரர்கள்..!

குழந்தைங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். விளையாட்டு..வினையானது என்னும் பழமொழியைப் போல, குழந்தைகளின் விளையாட்டு எப்போது விபரீதத்தில் முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அப்படி விபரீதத்தில் முடிந்த ஒரு சிறுவனின் விளையாட்டை, தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

சீனாவின் டேட்டாங்சிட்டியில் 7வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது இன்னொரு சிறுவனிடம் இருந்து ஒளிந்துகொள்வதற்காக அவன் இரு தூணுக்கு இடையில் சென்று ஒளிந்தான். ஆனால் அவனால் தூணில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் சிறுவன் ரொம்பவே பயந்து போனான்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சீன நாட்டின் தீயணைப்பு போலீஸார், மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டனர். உடனே, ஹைட்ராலிக் ஜாக் என்னும் கருவியின் மூலம் தூண்களுக்கு இடையேயான இடைவெளியை கூட்டினார்கள். அதேபோல் தூணை மொத்தமாக இடித்தால் ஒட்டுமொத்த கட்டிடமும் சேதமாகும் என்பதால் தூணின் கார்னர்களை மட்டும் செதுக்கி, சிறுவனை மிகவும் சாதுர்யமாக சிறுகாயங்கள் கூட இல்லாமல் காப்பாற்றினார்கள்.

இது சீன நாட்டு மக்கள் மத்தியில் தீயணைப்புத்துறையின் மரியாதையை கூட்டியுள்ளது. அதேநேரம் குழந்தைகள் விளையாடும்போது, எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :