இரத்த குழாயில் அடைப்பா? ஈஸியாக போக இந்த ஜீஸ் குடிங்க! உங்க ஆரோக்கியம் உங்க கையில்..! Description: இரத்த குழாயில் அடைப்பா? ஈஸியாக போக இந்த ஜீஸ் குடிங்க! உங்க ஆரோக்கியம் உங்க கையில்..!

இரத்த குழாயில் அடைப்பா? ஈஸியாக போக இந்த ஜீஸ் குடிங்க! உங்க ஆரோக்கியம் உங்க கையில்..!


இரத்த குழாயில் அடைப்பா? ஈஸியாக போக இந்த ஜீஸ் குடிங்க! உங்க ஆரோக்கியம் உங்க கையில்..!

அதியமான் அவ்வைப் பாட்டிக்கு கொடுத்த பெருமைக்கு உரியது நெல்லிக்கனி. நெல்லிக்கனியில் இல்லாத சத்துக்களே இல்லை என்றே சொல்லலாம். நெல்லிக்கனி, நம் இதயத்தில் படித்திருக்கும் கொழுப்பையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. நெல்லியில் நிறைந்திருக்கும் வைட்டமின் சியானது, நம் இரத்தக்குழாய்களில் படித்திருக்கும் கொலஸ்டிராலைக் கரைக்கும். இதனால் தீமை செய்யும் கொலஸ்டிரால் முற்றிலும் போய்விடும்.

பொதுவாக நெல்லி ஜூஸில் துவர்ப்புத் தன்மை கூடுதலாக இருக்கும். இதனால் பலரும் இதைத் தவிர்த்து விடுகின்றனர். தினமும் காலையில் எழுந்ததும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் பல நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். தினம் நெல்லிச்சாறு குடித்த்ச்ச்ல் எலும்பு உறிஞ்சி செல்களைத் தாக்கி, நம் எலும்பை பலம் அடையச் செய்துவிடும்.

இதேபோல் ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி ரத்தச் சுத்திகரிப்பு செய்யும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் கூட்டும். ரத்தத்தையும் தூய்மையாக வைத்திருக்கும். இதேபோல் சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்காய் சாறில் கொஞ்சம் மஞ்சள்தூள் மற்றும் தேன் கலந்து தினமும் குடித்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இதேபோல் நெல்லிக்காய் ஜூஸில் கொஞ்சம் தேன் கலந்து, நாளொன்றுக்கு இருமுறை குடித்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

தினமும் சாறாகவோ, நெல்லிக்காயாகவோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். இதனால் குடலின் இயக்கமும் சீராக இருக்கும். எடல் எடைக் குறைப்புக்கும் நெல்லிக்காய் சாறு மிகுந்த பலன் தரும். காலையில் தூங்கி முழித்ததும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை குடித்தால் உடல் எடை படிப்படியாக குறையும். நெல்லிசாறும், தேனும் கலந்து குடித்தால் ரத்தம் சுத்தமாகும். இதனால் சுறுசுறுப்பு கூடும். சிறுநீர் எரிச்சல், உடல் சூட்டைத் தணிப்பதிலும் நெல்லிச்சாறு முக்கியப்பங்கு வகிக்கிறது.

நெல்லிக்காய் சாறு முகப்பொழிவுக்கும் திறவுகோலாக இருக்கிறது. சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருக்கும். இது அதிகரிக்க, காட்டு நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடும். அதேபோல் கண்நோய், சர்க்கரை நோய், குடல்புண், ரத்தசோகை ஆகியவற்றுக்கும் நெல்லிச்சாறு அருமருந்து. நெல்லியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்களும், சூப்பராக்ஸைடும் புற்றுநோய் வராமலும் காக்கும்.

எல்லாம் ஒகே...இந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படி தயார் செய்வது என்று தானே கேட்கிறீர்கள். வெரிசிம்பிள். குறிச்சுக்கோங்க...

இதற்கு பெரிய நெல்லிக்காய் பத்தும், ஒரு இளநீரும், தேவையான அளவு தேனும் தேவை. நெல்லிக்காயில் கொட்டையை நீக்கிவிட்டு நெல்லிக்காயின் சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனோடு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்ட வேண்டும். இப்போது கிடைக்கும் சாற்றோடு, தேன் மற்றும் இளநீர் சேர்த்து குடிக்கலாம்.

இதேபோல் தினசரி ஒரு நெல்லிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் அண்டாது.


நண்பர்களுடன் பகிர :