நீங்கள் மனதளவில் பக்குவப்பட்ட மனிதர் தானா? உங்களை நீங்களே சோதித்து அறிய சூப்பர் டிப்ஸ்...! Description: நீங்கள் மனதளவில் பக்குவப்பட்ட மனிதர் தானா? உங்களை நீங்களே சோதித்து அறிய சூப்பர் டிப்ஸ்...!

நீங்கள் மனதளவில் பக்குவப்பட்ட மனிதர் தானா? உங்களை நீங்களே சோதித்து அறிய சூப்பர் டிப்ஸ்...!


நீங்கள் மனதளவில் பக்குவப்பட்ட மனிதர் தானா?   உங்களை நீங்களே சோதித்து அறிய சூப்பர் டிப்ஸ்...!

மனிதர்களில் சிலர் முதிர்ச்சியான பக்குவப்பட்டவர்களாக இருப்பார்கள். சிலரோ, அது இல்லாமல் குறை குடம் போல் கூத்தாடுவார்கள். இன்னும் கூட கிராமப் பகுதிகளில் சிலரது செயல்களைப் பார்த்து, ‘’சிறு பிள்ளைத்தனம்” என சொல்வதைப் பார்த்திருப்போம். மனிதனுக்கு வயது ஏறினாலே பக்குவம் வரும் என்று நினைப்பது தவறு, வயதுக்கும், பக்குவத்துக்கும் தொடர்பு கிடையாது. உங்கள் வயது எதுவாகினும் நீங்கள் பக்குவப்பட்ட முதிர்ச்சியான மனிதன் தானா என உங்களை நீங்களே சோதித்துக்கொள்ள இதை படியுங்கள்...

உடலின் மீதான கவர்ச்சியும், செக்ஸ் ஆசையும் அடங்கி ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் மனதைப் பார்க்க ஆரம்பித்திருப்போம். பணம், பொருளுக்கானது மட்டுமே வேலை என்பதில் இருந்து விலகி வந்திருப்பார்கள். அவர்களின் மனம் பார்க்கும் வேலையையே, திருப்தியாய் உணரத் துவங்கியிருக்கும். தனிமையில் இருப்பது, இயற்கையுடன் இருப்பது என அவர்களின் மனம் ரிலாக்ஸாக ஓய்வெடுக்கும்.

கலையின் மீதான நாட்டம் கூடும். ஓவியம், நடனம், இசையின் மீதெல்லாம் காதல் பூக்கும். அவர்களின் ஆழ்மனதுக்குள் அர்த்தமுள்ள கேள்விகள் அவ்வப்போது எழும். தன்னிலும் வயது மூத்தவர்களுடன் சினேகம் உண்டாகும். சுவாரஸ்யமான விசயங்களை தேடித்தேடிப் படிப்பார்கள். பார்ப்பார்கள். எதனையும் ஆய்ந்து, அறியும் சிந்தனை தளிர்த்திருக்கும். மற்றவர்களைப் பற்றி யோசிக்கும் தன்மை கூடியிருக்கும். தன்னலம் மறந்து பொதுநல நோக்கோடு இயங்கும் தன்மை வந்திருக்கும்.

மனிதர்களின் மனங்களைக் கணிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். ஒருகட்டத்தில் இப்படியானவர்களைத் தேடி வரும் உறவுக்காரர்கள், ஊர்க்காரர்கள் தங்களின் சுக, துக்கங்களை அவர்களிடம் கொட்டுவார்கள். இதில் உங்களுக்கு நான்கு விசயங்களேனும் பொருந்திப் போனால் நீங்களும் பக்குவப்பட்ட மனிதர் தான் நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :