வடிவேலுவின் மருமகள் யார் என்பது தெரியுமா.? சினிமாவில் தான் காமெடியன்...நிஜத்தில் ஹீரோதான் நம் நேசமணி! Description: வடிவேலுவின் மருமகள் யார் என்பது தெரியுமா.? சினிமாவில் தான் காமெடியன்...நிஜத்தில் ஹீரோதான் நம் நேசமணி!

வடிவேலுவின் மருமகள் யார் என்பது தெரியுமா.? சினிமாவில் தான் காமெடியன்...நிஜத்தில் ஹீரோதான் நம் நேசமணி!


வடிவேலுவின் மருமகள் யார் என்பது தெரியுமா.? சினிமாவில் தான் காமெடியன்...நிஜத்தில் ஹீரோதான் நம் நேசமணி!

காலையில் வேலைக்குப் போய்விட்டு அப்பாடா என உடல் வலித்து வீடு திரும்பும் பலருக்கும் இன்றும் மாலைநேர இளைப்பாறுதல் கொடுப்பது வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிக் காட்சிகள் தான். அவர் ஆக்டிவாக நடிப்பதில் இருந்து ஒதுங்கி ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் கூட ரசிகர்களை ஏங்க வைத்துக் கொண்டிருப்பவர் வடிவேலு. ஆம் அவரை மீண்டும் படங்களில் பார்த்து விட மாட்டோமா என இப்போதும் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏங்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார் வடிவேலு.

சமூகத்தில் இன்று நடக்கும் நிகழ்வுகள் அத்தனைக்கும் வடிவேலுவின் காமெடிகள் பொருந்திப் போவது ஆச்சர்யமான விசயம் தான். அந்த வகையில் வடிவேலு ஒரு லிஜெண்ட். திரையில் தன்னை தரைமட்டத்துக்கு இறக்கி, அடி, உதை வாங்கி, குறும்புத்தனங்கள் செய்து பார்வையாளர்கள் மத்தியில் காமெடியனாக இருக்கும் வடிவேலு நிஜத்தில் ஹீரோ தான். ஆம்...அது எப்படி எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

புகழின் உச்சத்தில் இருக்கும் திரைப்பிரபலங்களானாலும் சரி, அல்லது வசதியானவர்கள் ஆனாலும் சரி தங்கள் பிள்ளைகளுக்கு பணக்கார வீட்டில் சம்பந்தம் செய்யவே விரும்புவார்கள். பணம் இங்கெல்லாம் பணத்தோடு சேரும். பகட்டு, பகட்டோடு சேரும். ஆனால் வைகைப்புயல் வடிவேலு இந்த புகழ்ச்சிக்கும், தான் ஒரு திரைப்பிரபலம் என்பதற்கும் மயங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதையெல்லாம் அவர் எப்போதுமே தலையில் ஏற்றிக் கொண்டதும் இல்லை.

ஆம்...இவரது மகன் சுப்பிரமணிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தன் நெருங்கிய உறவுகளை மட்டும் கூப்பிட்டு சொந்த ஊரில் இந்த கல்யாணத்தை நடத்தினார் வடிவேலு. இவரது மருமகளின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம். மருமகளின் தந்தை மரவேலை செய்யும் சாதாரண கூலித் தொழிலாளி.

தான் உச்சத்தில் இருக்கும் நடிகன், செல்வாக்கு மிக்கவன் என எந்த சமூக அந்தஸ்துக்கும் இடம் கொடுக்காமல், ஒரு ஏழைக் குடும்பத்தை தன்னளவுக்கு கை தூக்கி உயர்த்த இப்படிச் செய்தாராம் வடிவேலு. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு, பட்டினியெல்லாம் கிடந்து தான் சினிமாத்துறைக்குள் வந்தார் வடிவேலு. ஆனால் இன்று தினம் ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடும் நிலைக்கு வளர்ந்து விட்டாலும் தன் பழசை மறக்காத இந்த வடிவேலுவை திரையில் காமெடியன் என்றும், நிஜத்தில் ஹீரோ என்றும் சொல்வது சரிதானே?


நண்பர்களுடன் பகிர :