மீண்டு வாருங்கள் வைகைப் புயலே... மறக்க முடியுமா வடிவேலு தந்த மகிழ்ச்சியை...! Description: மீண்டு வாருங்கள் வைகைப் புயலே... மறக்க முடியுமா வடிவேலு தந்த மகிழ்ச்சியை...!

மீண்டு வாருங்கள் வைகைப் புயலே... மறக்க முடியுமா வடிவேலு தந்த மகிழ்ச்சியை...!


மீண்டு வாருங்கள் வைகைப் புயலே...  மறக்க முடியுமா வடிவேலு தந்த மகிழ்ச்சியை...!

வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வரும் ஆண்கள், தங்கள் சமையல் வேலைக்கு நடுவே யூடியூப்பை யும், நகைச்சுவை சேனல் களையும் ஓடவிடும் பெண்கள், வீட்டில் இருக்கும் பொடி என மொத்த குடும்பத்தின் ஓய்வு நேரத்தையும் தனதாக்கிய மகா கலைஞன் வடிவேல்.

நேசமணி பாத்திரத்தையும், அந்த சுத்தியலையும் ஒட்டுமொத்த இணைய வாசிகள் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்க மீண்டும் ஒரு ரவுண்ட் வந்துவிட மாட்டாரா என ஏங்க வைத்து உள்ளார் வடிவேல்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹீரோவின் கால்சிட் கிடைப்பதை விட வடிவேலுவின் கால்ஷிட் கிடைப்பது தான் பெரிய விசயமாக இருந்தது. திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்த போதே தன்னிச்சையாக படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

இவர் நடித்த காட்சிகளும், பேசிய வசனங்களும் எந்த காலத்திற்கும் அரசியல், பொது விசயங்களில் இன்றும் பொருந்திப் போகிறது. வின்னர் படத்தில் வடிவேலுவின் நடிப்பு அவரை இன்னொரு தளத்துக்கு அழைத்துப் போனது. வெறுமனே நகைச்சுவை என்னும் பதத்துக்கு உள்ளே மட்டும் அவரை அடக்கி விட முடியாது. அவருக்கு உள் ஒரு அற்புதமான பாட்டு பாடும் கலைஞனும் இருந்தான்.

இதுமட்டுமல்ல, வடிவேலுவின் குணச்சித்திர நடிப்புக்கு தேவர் மகன் படமே சாட்சி. தென்னிந்திய சினிமா வரலாற்றில் ஒரு நகைச்சுவை நடிகன் நாயகனாக அரிதாரம் பூசி பிரமாண்டமான செட் போட்டு, மன்னர் கால கதையாக படம் எடுக்கப்பட்டதும் வடிவேல் நடித்த இம்சை அரசன் புலிகேசி தான்.

பலரின் டென்ஷன் குறைப்பு ரிலாக்‌ஷேசன் மருந்தே வைகைபுயல் தான். நேசமணிக்காக பிரார்த்திப்போம் என ட்ரெண்டானதைப் போல மீண்டு வாருங்கள் வடிவேல் சார் என ட்ரெண்டாக்குவோம். வைகைப்புயல் மீண்டும் வர வேண்டும். நம்மையெல்லாம் மகிழ்ச்சி என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்த வேண்டும். சரிதானே நண்பர்களே?


நண்பர்களுடன் பகிர :