இந்த கடைக்கு பேரே இராகுகாலம் தான்! ஓனரின் நல்ல நேரம் எப்படி இருக்கு? Description: இந்த கடைக்கு பேரே இராகுகாலம் தான்! ஓனரின் நல்ல நேரம் எப்படி இருக்கு?

இந்த கடைக்கு பேரே இராகுகாலம் தான்! ஓனரின் நல்ல நேரம் எப்படி இருக்கு?


இந்த கடைக்கு பேரே இராகுகாலம் தான்!  ஓனரின் நல்ல நேரம் எப்படி இருக்கு?

கல்யாணம், காதுகுத்து தொடங்கி சொந்தத் தொழில் செய்வது வரை நல்லநேரம் பார்த்து தொடங்குவது வழக்கம். இராகு காலம் என்றால் அந்த நேரத்தில் எந்த சுபகாரியத்திலும் ஈடுபட மாட்டார்கள்.

ஆனால் திருச்சியில் ஒருவர் தன் கடைக்கே இராகு காலம் என பெயர் இட்டுள்ளார்.

திருச்சி மயிலம் சந்தையில் ரவுண்ட் வருபவர்கள் நிச்சயம் அந்த கடையை தன்னிச்சையாக திரும்பிப் பார்ப்பார்கள்.

காரணம் அங்குள்ள ஒரு லாரி புக்கிங் ஆபீசின் பெயரே இராகுகாலம் தான். திருச்சியில் இருந்து லால்குடி வரை செல்லும் தினசரி லாரி புக்கிங் ஆபீசான இதன் பெயர் இராகுகாலம் லாரி புக்கிங் ஆபீஷ்.

நல்லநேரம் பார்க்காமல் இராகுகாலத்திலேயே தொழில் தொடங்க பலரும் யோசிக்க நிலையில் கடையின் பெயரையே இராகுகாலம் என வைத்திருப்பதால் இவர் கடவுள் மறுப்பாளர் என்று நினைத்துவிடக் கூடாது. இவர் கடையின் விளம்பர பலகையிலேயே விநாயகர் படம் வைத்து உள்ளார். மேலும் அந்த பதாகையிலேயே விநாயகர், முருகன் துனை எனவும் இருக்கிறது. இந்த படம் இப்போது சோசியல் மீடீயாக்களில் பரவி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :