மாணவர்களுக்கு பாடமான தமிழக முன்னோடி விவசாயி... பள்ளிக்கூட பாட புத்தகத்தில் கிடைத்த அங்கீகாரம்.! Description: மாணவர்களுக்கு பாடமான தமிழக முன்னோடி விவசாயி... பள்ளிக்கூட பாட புத்தகத்தில் கிடைத்த அங்கீகாரம்.!

மாணவர்களுக்கு பாடமான தமிழக முன்னோடி விவசாயி... பள்ளிக்கூட பாட புத்தகத்தில் கிடைத்த அங்கீகாரம்.!


மாணவர்களுக்கு பாடமான தமிழக முன்னோடி விவசாயி... பள்ளிக்கூட பாட புத்தகத்தில் கிடைத்த அங்கீகாரம்.!

தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயியும், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டவருமான நெல் ஜெயராமன் குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறையின் பாடப்புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.

திருவாரூர் மாவட்டம் தட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் அவரை பின்பற்றி வாழ்ந்தார் ஜெயராமன். திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் நெல் திருவிழாவை நடத்தத் துவங்கினார். இதன் மூலம் பாரம்பர்ய நெல்ரகங்களை மீட்கும் பணியை செய்து வந்தார் ஜெயராமன்.

இவர் ஒரு குறிப்பிட்ட நெல் ரகத்தை அதிகமான விவசாயிகளுக்கு பயிர் செய்யக் கொடுப்பார். அடுத்த ஆண்டு நடக்கும் நெல் திருவிழாவின் போது, அதே நெல் ரக விதைகளை அவர் கொடுத்ததை விடக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். அவர் அதை மேலும் சில விவசாயிகளுக்கு கொடுத்து பாரம்பர்ய நெல் ரகத்தை பரவலாக்கம் செய்வார். இப்படி இவர் இதுவரை 156 பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டு உள்ளார்.

நெல் ஜெயராமன் கடந்த 2011ம் ஆண்டு சிறந்த விவசாயிக்கான மாநில விருதையும் பெற்றவர். இதுபோக மரபணு பாதுகாவலர் விருதும் பெற்று உள்ளார். இப்போது இந்த ஜெயராமனுக்கு அங்கீகாரம் கொடுக்கும்வகையில் தமிழக அரசு, மேல்நிலைப் பள்ளி பாடப்பிரிவில் தாவரவியலில் இவர் குறித்து பாடமாக வைத்து உள்ளது. இந்த ஆண்டு முதல் மாணவர்கள் நெல் ஜெயராமன் குறித்தும் படித்து தெரிந்து கொள்வர்.

இதை பார்த்து பூரிக்க நெல் ஜெயராமன் தான் இன்று நம்முடன் இல்லை. பாரம்பர்ய நெல்ரக மீட்பில் ஆர்வம் கொண்ட ஜெயராமன் புற்றுநோய் தாக்கி பரிதாபமாக ஓர் ஆண்டு க்கு முன்னர் உயிர் இழந்தார். அவருக்கு தமிழக அரசு, நடிகர்கள் கார்த்திக், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் சிகிட்சையின் போதே நேசக்கரம் நீட்டினர்.

இயற்கை விவசாய கொள்கையில் வாழ்ந்த நெல் ஜெயராமன் பற்றி பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :