சுட, சுட டீ, காபி குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது...! Description: சுட, சுட டீ, காபி குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது...!

சுட, சுட டீ, காபி குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது...!


சுட, சுட டீ, காபி  குடிப்பவரா நீங்கள்?  உங்களுக்கான பதிவு இது...!

டென்ஷன் ஆனாலும் சரி, புத்துணர்ச்சி தேவைப்பட்டாலும் சரி நம்மவர்கள் தேநீருடன் தான் கொண்டாடுவார்கள். அதிகாலை தூங்கி முழித்ததுமே தேநீர் தான் அமிர்தம். அதிலும் பல் துலக்குவதற்கு முன்னரே ஆன பெட்காபி சிஸ்டத்துக்குள் நாம் போய் நீண்டகாலம் ஆகிறது. ஏன். அன்பை வெளிப்படுத்த, நீண்ட காலத்துக்கு பின்னர் சந்திக்கும் நண்பருடன் பொழுதைக் கழிக்க, காதலைச் சொல்ல என எத்தனையோ விசயங்களுக்கு கை கொடுப்பது ஒரு தேநீருக்கான இடைவெளி தான்.

காபியில் இருக்கும் காபின் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் என்பது ஊர் அறிந்த செய்தி. இப்போது டீக்கும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதிலும் தேநீரை சுடச்சுட குடிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் இருக்கிறது எனச் சொல்லி அதிர வைத்துள்ளனர்.

பொதுவாகவே சூடா ஒரு கப் டீ குடிச்சாத்தான் தலைவலி விடும் என பேசுபவர்கள் ஏராளம். ஆனால் டீயை சுடச்சுட குடித்தால் உணவுக்குழாய் புற்றுநோய் வரும் என எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. டீயை ஐந்து நிமிடங்கள் ஆறவைத்து குடிப்பதே சிறந்தது. அதில்லாமல் சுடசுட தொடர்ந்து குடிக்கும்போது உணவுக்குழாய், தொண்டை ஆகியவை பாதிக்கும் அபாயம் உண்டு.

இப்படி சுடசுட டீ குடிப்பது உணவுக்குழாயில் புற்றுநோயை உருவாக்கும். டபிள்யூ.ஹச்.ஓ எனச் சொல்லப்படும் உலக சுகாதார நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டே65 டிகிரி செல்சியஸில் சூடாக குடிக்கப்படும் எந்த பானமும் புற்றுநோயை உருவாக்கும் என எச்சரித்திருந்தது. இப்போது அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் எழுத்தாளர் பர்கத் இஸ்லாமியும் இதை உறுதிப்படுத்தி எழுதியிருக்கிறார். இந்த அமைப்பு 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரை ஆய்வு செய்து இதை வெளியிட்டுள்ளது.

ஆக, இனி டீயோ, காபியோ கொஞ்சம் ஆற வைச்சு குடிங்க பாஸ்! , .


நண்பர்களுடன் பகிர :