உலக அளவில் டிரெண்டான நேசமணி... ட்ரெண்டாக்கியவர் சொல்வது என்ன தெரியுமா? Description: உலக அளவில் டிரெண்டான நேசமணி... ட்ரெண்டாக்கியவர் சொல்வது என்ன தெரியுமா?

உலக அளவில் டிரெண்டான நேசமணி... ட்ரெண்டாக்கியவர் சொல்வது என்ன தெரியுமா?


உலக அளவில் டிரெண்டான நேசமணி...   ட்ரெண்டாக்கியவர் சொல்வது என்ன தெரியுமா?

கடந்த இரு தினங்களாக சமூகவலைதளங்களில் ப்ரே பார் நேசமணி என்பது ட்ரெண்டாகி வருகிறது. அதை ட்ரெண்டாக்கியவர் வீடீயோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டின் கட்டுமான நிறுவனம் ஒன்று ஒரு சுத்தியல் படத்தை தன் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இதற்கு உங்கள் நாட்டில் பெயர் என்ன எனக் கேட்டு இருந்தது. இதைப் பார்த்த விக்னேஷ் பிரபாகரன் என்னும் நெட்டிசன் இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டங் டங் என சத்தம் கேட்கும். காண்டிராக்டர் நேசமணியின் தலையில் இது விழுந்துவிட்டது என ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் காட்சியை நகைச்சுவைக்காக போட்டார். ஆனால் அதை தமிழகத்துக்கு வெளியே இருந்து படித்தவர்கள் உண்மை என நம்பி ப்ரே பார் நேசமணி என உருகினர்.

இப்போது இது டிரெண்ட் ஆனதைப் பார்த்த பின்பு வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் பிரபாகர். அதில், ‘’விளையாட்டாக பதில் சொன்னேன். உலக அளவில் பேமஸ் ஆகும் எனத் தெரியாது. செல்போனே முடங்கிப் போகும் அளவுக்கு பாராட்டுகள் குவிகிறது.

நான் துபாயில் வேலை செய்கிறேன். டிவி பார்க்க முடியாது. ஊரில் இருப்பவர்கள் டிவியில் வருவதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினர். வடிவேலு சாருக்கு நன்றி. கமெண்டிற்கு ஏதோ பத்துபேர் லைக் செய்வார்கள்.”என்று தான் நினைத்தேன் என வீடீயோ வெளியிட்டுள்ளார் அவர்.


நண்பர்களுடன் பகிர :