அடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா? Description: அடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா?

அடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா?


அடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா?

90 கிட்ஸ்களின் காலத்தை இலந்தைப் பழத்தின் காலம் என்றும் சொல்லலாம். இப்போதெல்லாம் கிண்டர் ஜாய் மிட்டாய்களின் காலம் வந்துவிட்டது.





அன்றைய பள்ளிக்காலத்தில் பள்ளி வாசலில் பாட்டிகள் இலந்தைப்பழம் விற்பார்கள். அதை ரொம்பவே விரும்பிச் சாப்பிடுவது அன்றைய கிட்ஸ்களின் வழக்கம். இந்த இலந்தை பழத்தில் பல சத்துக்களும் உள்ளன. இலந்தைப் பழம் இனிப்பு, புளிப்பு சுவையுடையது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரும்.

அதனால் இயல்பாகவே குளிர்ந்த உடல்வாகு உள்ளவர்கள் இதை மதியம் மட்டும் தான் சாப்பிட வேண்டும். 100 கிராம் இலந்தைப் பழத்தில் 74 சதவிகிதம் மாவுப் பொருள், 17 சதவிகிதம் புரதம், 0.8சதவிகிதம் தாது உப்புகள், இரும்பு சத்தும் உள்ளது.





இலந்தைப் பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதில் விட்டமின் ஏ,பி,சி,டி ஆகிய சத்துகள் உள்ளது. இலந்தை பழம் எலும்பு, பல்களுக்கு பலம் அளிக்கும். பித்தத்தை தணிக்கும். உடல் சூட்டை சமநிலைக்கு கொண்டு வரும். கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் இருமல் போகும்.





பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உபாதைகளை குறைக்கவும், அதிக உதிரப்போக்கைத் தடுக்கவும் இந்த இலந்தை பழம் உதவும். இலந்தை பழச் செடியின் இலையை அரைத்து நன்றாக தலையில் மை போல் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினார் இளநரை போய்விடும்.

இனி இழந்தை பழத்தைப் பார்த்தா மிஸ் பண்ணிடாதீங்க...


நண்பர்களுடன் பகிர :