பாரதியார் வேலை செய்த சுதேசமித்ரன் பிறந்த கதை... தமிழின் முதல் பத்திரிகையும் இதுதான்...! Description: பாரதியார் வேலை செய்த சுதேசமித்ரன் பிறந்த கதை... தமிழின் முதல் பத்திரிகையும் இதுதான்...!

பாரதியார் வேலை செய்த சுதேசமித்ரன் பிறந்த கதை... தமிழின் முதல் பத்திரிகையும் இதுதான்...!


பாரதியார் வேலை செய்த சுதேசமித்ரன் பிறந்த கதை...    தமிழின் முதல் பத்திரிகையும் இதுதான்...!

தமிழில் வெளிவந்த முதல் பத்திரிகை சுதேச மித்ரன். எட்டையபுரத்தில் பிறந்து வெள்ளையனை எதிர்த்து கவிதைகள் வடித்த பாரதியார் வேலை செய்ததும் இந்த பத்திரிகையில் தான். தமிழின் முதல் பத்திரிகையான சுதேசமித்ரன் முதலில் வார ஏடாக தொடங்கப்பட்டது. பின்பு வாரத்துக்கு மூன்று நாள்களாகி, அதன் பின்னரே தினசரி வரத் துவங்கி உள்ளது.

சுதேசமித்ரனின் நிறுவனரும், ஆசிரியருமான சுப்பிரமணிய ஐயர் இதுபற்றி அவரது காலத்தில் பேசியதில், ‘’நாங்க 6 பேர் சேர்ந்து 1878ல் ஹிந்து பத்திரிகை தொடங்கினோம். ஆனால் ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு தேச விவகாரங்களை தெரிந்து கொள்ள 1882ல் சுதேசமித்ரனை தொடங்கினேன்.

ஆனால் ஒரேகாலத்தில் இரண்டையும் கவனிக்க முடியவில்லை. இதனால் விசுவனாத அய்யரிடம் சுதேசமித்ரன் வேலையை ஒப்படைத்தேன். பின்பு நான் ஹிந்து பத்திரிகையை விட்டுவிலகிவிட்டு சுதேச மித்ரனை வளர்த்தேன்.”என்று சொல்லியுள்ளார்.

இதுதான் நம் தமிழ் மொழியில் வந்த முதல் பத்திரிகை. இன்று செய்தித்தாளையும் தாண்டி லேப் டாப், செல்போன் என பல வடிவங்களில் செய்திகளை படித்தாலும் அதற்கெல்லாம் முன்னோடி இவர் தான்.


நண்பர்களுடன் பகிர :