சாதாரண பெயிண்டர் நேசமணி உலக அளவில் வைரலானது எப்படி.. ப்ரே பார் நேசமணி.. ஹேஸ்டேக்கின் பிண்ணனி இதுதான்! Description: சாதாரண பெயிண்டர் நேசமணி உலக அளவில் வைரலானது எப்படி.. ப்ரே பார் நேசமணி.. ஹேஸ்டேக்கின் பிண்ணனி இதுதான்!

சாதாரண பெயிண்டர் நேசமணி உலக அளவில் வைரலானது எப்படி.. ப்ரே பார் நேசமணி.. ஹேஸ்டேக்கின் பிண்ணனி இதுதான்!


சாதாரண பெயிண்டர் நேசமணி உலக அளவில் வைரலானது எப்படி.. ப்ரே பார் நேசமணி.. ஹேஸ்டேக்கின் பிண்ணனி இதுதான்!

இணையத்தில் எப்போது எந்த ஹேஸ்டேக் வைரலாகும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களாக இணையத்தில் ப்ரே பார் நேசமணி என்னும் பதிவு வைரலாகி வருகிறது.

இதன் சுவாரஸ்ய பிண்ணனி இதுதான். சிவில் இன்ஜினியர்ஸ் லேனர்ஸ் என்னும் சமூகவலைதளத்தில் ஒரு சுத்தியல் படத்தைப் போட்டு இது உங்கள் ஊரில் என்ன பெயர் என கேட்டு பதிவு போட்டு இருந்தனர் அதன் கீழே விஷ்ணு பிரபாகர் என்பவர் கமெண்ட் செய்திருண்ட்ர்ஹார். அவர் இதன் பெயர் சுத்தியல். ஒரு ஜமீன் வீட்டில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தபோது கிருஷ்ணமூர்த்தி மாடியில் இருந்து தன் சுத்தியலை தவறவிட்டு விட்டார். இது காண்டிராக்டர் நேசமணி தலையில் விழுந்து விட்டது”என போட்டிருந்தார். அதற்கு கீழே கமெண்ட் செய்த இன்னொருவர், நேசமணி நலம்பெற பிரார்த்திகிறேன் என போட்டு இருந்தார்.

அதை ஒருவர் படம் எடுத்து ட்விட்டரில் போட அந்த ஹேஸ்டாக் வைரலானது. கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்கள் ஏற்கனவே ஒருமுறை, நேசமணியை கட்டிலோடு தூக்கிச் சென்றது, நேசமணி கரிடப்பாவுக்குள் விழுந்தது என ஒவ்வொரு சம்பவமாக பகிரத் துவங்கினர். இது எல்லாமே சித்திக் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா நடிப்பில் மெகா ஹிட்டான பிரண்ட்ஸ் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் தான்.

இதில் நேசமணியாக வருவது நம்ம வைகைப் புயல் வடிவேலு தான்.. வடிவேலு தனிப்பட்ட பல காரணங்களினால் இப்போது படங்களிலேயே நடிப்பது இல்லை.

ஆனாலும் காலம் கடந்தாலும் ஒரு கதாபாத்திரம் இத்தனை வலிமையாய் இருப்பது அந்த கலைஞனின் திறமைக்கு இன்னும் ஒரு மணிமகுடம்!.


நண்பர்களுடன் பகிர :