செந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம்.! Description: செந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம்.!

செந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை... நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம்.!


செந்தில்_ராஜலெட்சுமி ஜோடியை குஷியாக்கிய வெளிநாட்டு ரசிகை...  நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கும் நடனமாடிய ஆச்சர்யம்.!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி புகழின் உச்சத்திற்கே சென்றவர்கள் தான் செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி. இவர்களின் நாட்டுப்புறப்பாட்டுக்கு தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரசிகர்கள் உண்டு. இப்போது இவர்கள் வெள்ளித்திரையிலும் பாடி வருகின்றனர். அண்மையில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2ல் இந்த ஜோடி ஒரு பாடல் பாடியது.

திரைத்திரை, சின்னத்திரைக்கு வெளியே இவர்கள் நடத்தும் இசை கச்சேரிக்கு இந்தியாவுக்குள் எனில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். இதுபோக இந்த ஜோடி வெளிநாடுகளிலும் போய் பாடி வருகிறது. அதன் ஒரு அங்கமாக அண்மையில் இந்த ஜோடி அமெரிக்காவுக்கு பாடப் போனது. அப்போது அங்கு நிகழ்ச்சிக்கு இந்த ஜோடியின் ரசிகை ஒருவரும் வந்திருந்தார்.

அவர் இந்த ஜோடி பாடிக் கொண்டிருக்கும்போதே மேடை ஏறி நம்மூரு நாட்டுப்புறப்பாட்டுக்கு பட்டையை கிளப்பும் ஆட்டத்தை போட்டு இருக்கிறார். அவரைக் கவனித்த செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி அவரோடு ஒரு செல்பி வீடீயோ போட்டுள்ளனர்.

அதில், ‘’அந்த வெளிநாட்டுப் பெண் தமிழிலேயே பேசுவத்தோடு, இவர்களின் பாடல் புடித்திருந்ததால் மேடைக்கு வந்து ஆடினேன்”என சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இப்போது இந்த செல்பி வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :