அடடே அங்காடித்தெரு மகேஷ் மிஸ் செய்த படங்களா இவை? வேதனையில் அவரே புலம்பிய பட்டியல் இது! Description: அடடே அங்காடித்தெரு மகேஷ் மிஸ் செய்த படங்களா இவை? வேதனையில் அவரே புலம்பிய பட்டியல் இது!

அடடே அங்காடித்தெரு மகேஷ் மிஸ் செய்த படங்களா இவை? வேதனையில் அவரே புலம்பிய பட்டியல் இது!


அடடே அங்காடித்தெரு மகேஷ் மிஸ் செய்த படங்களா இவை?    வேதனையில் அவரே புலம்பிய பட்டியல் இது!

ஒரே படத்தில் சிலர் புகழின் உச்சத்துக்கே போய்விடுவார்கள். அப்படிப் போனவர்களின் ஒருவர் தான் அங்காடித்தெரு படத்தில் நடித்த மகேஷ். ஆனால் இப்போது மகேஷ் கோடம்பாக்கத்தில் தான் இருக்கிறாரா என கேள்வி கேட்கும் அளவுக்கு பரிதாபகதியில் இருக்கிறார்.

இதுகுறித்து அவரே அண்மையில் பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். ‘’எனது பூர்வீகம் திண்டுகல். நான் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் பஸ்க்காக நின்னுட்டு இருந்தப்போ தான் எனக்கு அங்காடித்தெரு பட சான்ஸ் கிடைச்சுது. வசந்தபாலன் சார் தந்த அறிமுகத்தால முதல் படத்துலயே ஹிட் ஆனேன். நான் சினிமாவுக்கு வருவேன், ஹீரோவா நடிப்பேன்னு கனவுல கூட நினைச்சுப் பார்க்கல.

அங்காடித்தெருவில் நடிக்கும் போது எனக்கு சினிமா பத்தி எதுவுமே தெரியாது. அங்காடித்தெருவுக்கு பின்னாடி, சினிமாவில் நீடிச்சு நிக்க என்ன செய்யணும்ன்னு எனக்கு சொல்லித்தரக் கூட யாரும் இல்ல. தேடிவந்த பல வாய்ப்புகளையும் இதனால மிஸ் பண்ணிருக்கேன். ஐ மீன் தேடிவந்த நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை சொல்றேன்.

அதர்வா நடிச்ச ஈட்டி படத்துல நடிக்க அந்த இயக்குநர் என்கிட்ட தான் கேட்டார். சுந்தரபாண்டியன் படத்துல்ச் விஜய் சேதுபதி சார் பண்ண ரோல், மாயாண்டி குடும்பத்தார் படவாய்ப்புன்னு நிறைய சொல்லலாம். இதையெல்லாம் விட்டுட்டு நான் நடிச்ச படங்களும் சரியா போகல” என வேதனை ததும்ப சொல்லியிருக்கிறார்.

ம்ம்...காற்றுள்ள போதே தூற்றுக்கொள்ள சொல்லி பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?


நண்பர்களுடன் பகிர :