தாயின் பசி போக்க பிச்சையெடுத்த குழந்தை.. மனதை உருகவைக்கும் சம்பவம்..! Description: தாயின் பசி போக்க பிச்சையெடுத்த குழந்தை.. மனதை உருகவைக்கும் சம்பவம்..!

தாயின் பசி போக்க பிச்சையெடுத்த குழந்தை.. மனதை உருகவைக்கும் சம்பவம்..!


தாயின் பசி போக்க பிச்சையெடுத்த குழந்தை.. மனதை உருகவைக்கும் சம்பவம்..!

பசியால் வீல்...வீல் என்று அழும் குழந்தைக்கு உணவிட துடிக்கும் அம்மாக்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் பசியால் துடிக்கும் அம்மாவுக்கு உணவிட துடித்த 6 வயது குழந்தையின் செயல் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அந்த அம்மா குடிகாரத்தாயும் கூட!

வீட்டில் ஆண் குடித்தாலே அந்த குடும்பம் மிகப்பெரிய சீரழிவுக்குள் சிக்கிக் கொள்ளும். அதே வீட்டில் பெண் குடித்தால்? அந்த குடும்பத்தையே நிர்மூலமாக்கிவிடும். கர்நாடகத்தில் கொப்பல் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் துர்க்காம்மா. இவரது கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கத்தினால் துர்க்கம்மாவை கை கழுவி விட்டுள்ளார். இதனால் தன் 6 வயதான குழந்தை பாக்யலெட்சுமியுடன் மன வேதனையில் தவித்த துர்க்கம்மா ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையானாள்.

குடி ஓவரானதில் ஒருகட்டத்தில் அவரது உடல் ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன்மைத் தொடர்ந்து அவர் சிகிட்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு துணையாக 6 வயதே ஆன பாக்கியலெட்சுமியே இருந்தார். மருத்துவமனையில் இருந்த தன் தாய் துர்கம்மாவுக்கு பசி எடுக்கவே, அவருக்கு உணவு வாங்க காசில்லாத பாக்கியலெட்சுமி சாலையில் இறங்கி பிச்சையெடுக்கத் துவங்கினார். அதில் கிடைக்கும் பணத்தில் தன் தாய்க்கு மருத்துவமனையில் இருந்த நாளெல்லாம் உணவு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அந்த பகுதிவாசி ஒருவர் குழந்தைகள் நல அலுவலருக்குச் சொல்ல, அவர்கள் விரைந்து வந்து அந்த குழந்தை பாக்கியலெட்சுமியை மீட்டு ஒரு காப்பகத்தில் சேர்த்து படிக்க வசதி செய்து கொடுத்தனர். மேலும் அந்த குழந்தையின் தாய் துர்க்கம்மாவின் மருத்துவ செலவீனங்களையும் கவனித்து வருகின்றனர்.

தன் தாய் குடிகாரியாக இருந்தாலும், அந்த அம்மாவின் வயிற்றுப்பசியை யோசித்த இந்த பிஞ்சுக் குழந்தையை கொண்டாடுகின்றனர் இணையவாசிகள்.


நண்பர்களுடன் பகிர :