இன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்..! Description: இன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்..!

இன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்..!


இன்னும் இருக்கிறது மனிதம்: தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுவனுக்கு விமானத்தில் வந்து உதவிய கோடீஸ்வரன்..!

நம் கண்முன்னே பார்க்கும் விசயங்களுக்கே உதவி செய்யாமல் பலரும் நகர்ந்து சென்று விடுகின்றனர். ஆனால் எங்கோ ஒரு மூலையில் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, விமானம் ஏறிவந்து உதவியிருக்கிறார் ஒரு கோடீஸ்வரர். இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் தான் உலகம் உயிர்ப்புடன் இருப்பதாக சமூகவலைதளங்களில் அது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பெருவை சேர்ந்த விக்டர் மார்டின் இயல்பிலேயே மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். அதேநேரம் விக்டர் மார்டின் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். இவனது வீட்டில் மின்சார வசதி கூட இல்லாத நிலையிலும், பள்ளிக்கு போய்விட்டு வந்ததும் தெருவிளக்கு வெளிச்சத்தில் இருந்து படிப்பதை வழக்கமாக வைத்திருந்தான் சிறுவர் விக்டர் மார்ட்டின்.

இதைப் பார்த்து சிலாகித்துப் போன ஒருவர் அதை வீடீயோவாக எடுத்து, தன் பேஸ்புக் பக்கத்தில் போட, சிறுவனின் படிப்பு ஆர்வமும், அதற்கு முட்டுக்கட்டை போடும் அவனது குடும்ப சூழல் குறித்தும் பலருக்கும் தெரிய வந்தது. இதை சோசியல் மீடியாவில் பார்த்து தெரிந்துகொண்ட பஹ்ரைனில் வசிக்கும் யாகுப் யூசப் அகமது என்னும் இளம் கோடீஸ்வரர் அவருக்கு உதவ நினைத்தார்.

அங்கிருந்து பெருவுக்கு விமானத்தில் வந்த அவர் சிறுவன் விக்டரின் இருப்பிடத்தை தேடிக் கண்டுபிடித்தார். வந்ததுமே, சிறுவனின் வீட்டுக்கு மின்சாரம் வசதி செய்து கொடுத்தார். கூடவே சிறுவன் பயிலும் பள்ளிக்கூடம், அவன் வசிக்கும் வீட்டையும் சீரமைக்க உதவுவதாகச் சொல்ல, சிறுவன் கண்ணீர் மல்க நன்றி சொன்னான். இதுவும் இப்போது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :