சேவல் கூவுவதை நிறுத்தக்கோரி போலீஸில் புகார் கொடுத்த பெண்... பின் நடந்தது என்ன தெரியுமா? Description: சேவல் கூவுவதை நிறுத்தக்கோரி போலீஸில் புகார் கொடுத்த பெண்... பின் நடந்தது என்ன தெரியுமா?

சேவல் கூவுவதை நிறுத்தக்கோரி போலீஸில் புகார் கொடுத்த பெண்... பின் நடந்தது என்ன தெரியுமா?


சேவல் கூவுவதை நிறுத்தக்கோரி போலீஸில் புகார் கொடுத்த பெண்...  பின் நடந்தது என்ன தெரியுமா?

நாய் குரைக்கும், சிங்கம் கர்ஜிக்கும், என்பதைப் போல கூவுவது சேவலின் சுபாவம். ஆனால் சேவல் கூவுவதை நிறுத்தக்கேட்டு பெண் ஒருவர் காவல் நிலையத்துக்குப் போய் புகார் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் சோம்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதை வாங்கிப் படித்த காவலர்களுக்கு தலையே சுற்றி விட்டது.

புகாரில் அப்படி என்ன எழுதியிருந்தது தெரியுமா? ‘’தன் வீட்டுப் பக்கத்தில் ஒரு சேவல் இருக்கிறது. அது தினமும் அதிகாலையிலேயே கூவுகிறது. இதனால் தனக்கு தூக்கம் கெடுகிறது. எனவே சேவலின் கூவும் சத்தத்தை நிறுத்த வேண்டும்.”என இருந்தது.

என்னடா இது காக்கிச் சட்டைக்கு வந்த சோதனை என புகாரை படித்த போலீஸாருக்கு, இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ‘’புகாரை கொண்டு வந்த பெண்ணின் வீடே அது இல்லை. அவரே தன் சகோதிரி வீட்டுக்குத் தான் வந்திருக்கிறார். அதிலும் புகார் கொடுத்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவரது சகோதிரி மூலம் தெரியவர, யப்பா என பெருமூச்சு விட்டனர் போலீஸார்!


நண்பர்களுடன் பகிர :