நடிகர் விஜயின் தந்தைக்கு பார்சல் அனுப்பிய பாஜகவினர்... திருப்பூரில் இருந்து வந்த பார்சலில் என்ன இருந்தது தெரியுமா? Description: நடிகர் விஜயின் தந்தைக்கு பார்சல் அனுப்பிய பாஜகவினர்... திருப்பூரில் இருந்து வந்த பார்சலில் என்ன இருந்தது தெரியுமா?

நடிகர் விஜயின் தந்தைக்கு பார்சல் அனுப்பிய பாஜகவினர்... திருப்பூரில் இருந்து வந்த பார்சலில் என்ன இருந்தது தெரியுமா?


நடிகர் விஜயின் தந்தைக்கு பார்சல் அனுப்பிய பாஜகவினர்...   திருப்பூரில் இருந்து வந்த பார்சலில் என்ன இருந்தது தெரியுமா?

நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திருப்பூர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. விஜய் என்ன தான் பெரிய உச்சநட்சத்திரமாக இருந்தாலும் தந்தை சொல் தட்டாத தமையனாகவே இன்று வரை இருந்து வருகிறார். நடிகர் விஜய் நடத்தும், விஜய் மக்கள் இயக்கத்தையும் எஸ்.ஏ.சந்திரசேகரே பட்டி, தொட்டியெங்கும் கொண்டு சேர்ந்தவர். சமீபகாலமாக விஜயின் படங்கள் ரீலீஸ் ஆனாலே அரசியல் அரங்கில் அதிர்வுகளை உருவாக்கி வருகிறது. தலைவா படத்தில் இருந்தே இதுபோன்ற பிரச்னைகளும் தலைகாட்டத் துவங்கிவிட்டது.

தொடர்ந்து மெர்சல் படத்தில் விஜய் மருத்துவக் கொள்ளை, ஜி.எஸ்.டி பற்றிப்பேச பாஜகவினர் கடுப்பாகினர். சர்க்கார் படத்தில் இலவசப் பொருள்கள் வழங்குவதை விமர்சிக்க அதிமுகவோடு முட்டிக் கொண்டது. இப்படியான பஞ்சாயத்துகள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க, அண்மையில் வடபழனியில் ‘’காப்பாத்துங்க நாளைய சினிமாவை” என்னும் குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் பல பிரபலங்களும் கலந்துகொண்டு பேசினர். அதில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘’அரசியல்வாதிகளில் 90 சதவிகிதம் பேர் திருடர்கள் தான். அவர்கள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள். ஆட்சிக்கு யார் வந்தாலும் சினிமாவை காப்பாற்ற போவதே இல்லை. தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களுடன் அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனரோ என சந்தேகம் வருகிறது. மக்களை திரட்டி போராட்டம் நடத்தினால் தான் அரசுக்கு சொரணை வரும். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டி அலைய வேண்டியது தான். அலையத்தான் போகிறார்கள்.”என்று பேசியிருந்தார்.

ஏற்கனவே பாஜகவுக்கும், விஜய் படங்களுக்கும் முட்டிக் கொண்டு நிற்கும் நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேச்சு பாஜகவினரை வெகுவாகச் சீண்டியது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் விஜயின் தந்தை சந்திரசேகரின் முகவரிக்கு ஒரு காவி வேட்டி வாங்கி பார்சல் அனுப்பியுள்ளனர். இந்த பார்சல் படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்!


நண்பர்களுடன் பகிர :