சைக்கிளில் தான் பயணம்... குடிசை வீட்டில் வாழ்க்கை... ஒரு எளிமையான மனிதரை எம்.பியாக்கி அழகு பார்த்த மக்கள்..! Description: சைக்கிளில் தான் பயணம்... குடிசை வீட்டில் வாழ்க்கை... ஒரு எளிமையான மனிதரை எம்.பியாக்கி அழகு பார்த்த மக்கள்..!

சைக்கிளில் தான் பயணம்... குடிசை வீட்டில் வாழ்க்கை... ஒரு எளிமையான மனிதரை எம்.பியாக்கி அழகு பார்த்த மக்கள்..!


சைக்கிளில் தான் பயணம்... குடிசை வீட்டில் வாழ்க்கை...  ஒரு எளிமையான மனிதரை எம்.பியாக்கி அழகு பார்த்த மக்கள்..!

அரசியல் கம்யூனிஸ்ட் கட்சித்தான் எளியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பது பொதுவானவர்கள் பார்வை. ஆனால் அதில் கொஞ்சம் வித்யாசமாக பாஜக சார்பில் அப்படிப் போட்டியிட்ட ஒரு ஏழை இந்த தேர்தலில் எம்.பியாகி இருக்கிறார். அவருக்கு ஒரு குடிசை வீடும், ஒரு சைக்கிளும் தான் இருக்கிறது என்பது அதிசயமான ஆச்சர்யம்!

தற்போது 64 வயதாகும் பிரதாப் சந்திரா தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். தனது பொதுவாழ்க்கைக்காக இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எல்லாம் விதவிதமான கொகுசு கார்களில் ஓட்டுக்கேட்டு பவனிவர, பிரதாப் சந்திரா தன் பிரச்சார பயணத்தையே சைக்கிளில் போய் செய்தவர்.

அதிகபட்சமாக ஆட்டோவில் பயணித்தார் அவ்வளவு தான். இதுபோக மது, ஊழல், காவல்துறை அட்ராசிட்டி, பழங்குடி குழந்தைகளுக்க்கான அரசுத்திட்டத்தின் கீழ் கல்விக் கூடம் அமைத்தல் என தொடர் போராட்டங்களையும் நடத்தி சாதித்துக் காட்டிய களப்பணியாளர்!

ஓராண்டுக்கு முன்பு இவரது தாய் மரணிக்த்த நிலையில் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் தற்போது தனிமையில் வசித்து வருகிறார். இந்த தேர்தலில் பாலசூர் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளரான பிரதாப் சந்திராவை நிறுத்தியது பாஜக தலைமை. இவர் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த பிஜீ ஜனதா தள வேட்பாளர் ரமீந்தரகுமாரை 12,956 வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தினார்.

தனது குடிசை வீட்டில் இருந்து பெட்டி, படுக்கைகளோடு டெல்லிக் கிளம்பும் பிரதாப் சந்திராவின் படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :