சூப்பர் சிங்கருக்குள் நுழைந்த வயசான பாட்டி... ராஜலெட்சுமி_செந்தில் ஜோடி போல் ஈர்க்க வாய்ப்பு...! Description: சூப்பர் சிங்கருக்குள் நுழைந்த வயசான பாட்டி... ராஜலெட்சுமி_செந்தில் ஜோடி போல் ஈர்க்க வாய்ப்பு...!

சூப்பர் சிங்கருக்குள் நுழைந்த வயசான பாட்டி... ராஜலெட்சுமி_செந்தில் ஜோடி போல் ஈர்க்க வாய்ப்பு...!


சூப்பர் சிங்கருக்குள் நுழைந்த வயசான பாட்டி...  ராஜலெட்சுமி_செந்தில் ஜோடி போல் ஈர்க்க வாய்ப்பு...!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகத்தின் மூலை முடுக்குகள் வரை பேமஸ். எங்கோ ஒரு ஊர் மேடையில் பாடிக் கொண்டிருந்த பலரை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.

மக்கள் இசை பாடகர்களான ராஜலெட்சுமி_செந்தில் ஜோடி இப்போது ஒரு கச்சேரிக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு விஜய் டிவியால் உச்சம் தொட்டுள்ளனர். சினிமாப் பாடல்கள் மட்டுமன்றி, இப்போது அவர்கள் விளம்பரங்களிலும் தலைகாட்டுகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து இப்போது சூப்பர் சிங்கர் 7வது நிகழ்ச்சியில் மலையாத்தாள் என்ற வயதான பாட்டி தேர்வு பெற்று இருக்கிறார். இவரும் செந்தில்_ராஜலெட்சுமி போல் தனக்கென ஒரு ரசிகர் படையை ஈர்ப்பார் என இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள் சூப்பர் சிங்கர் ரசிகர்கள்.

மலையாத்தாள் உள்ளே வந்துள்ளதால் நிகழ்ச்சி பொழுதுபோக்காகவும் இருக்கும். அவரது திறமைக்கான அங்கீகாரமாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது

மலையாத்தாளின் படமும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாழ்த்துகளோடு பகிர்ந்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :