என் பிள்ளைங்க காதுகுத்துக்கு போகாதீங்க...வைரலாகும் போஸ்டர் மனைவியுடன் சண்டை போட்ட கணவர் ஒட்டிய வினோத நோட்டீஸ்..! Description: என் பிள்ளைங்க காதுகுத்துக்கு போகாதீங்க...வைரலாகும் போஸ்டர் மனைவியுடன் சண்டை போட்ட கணவர் ஒட்டிய வினோத நோட்டீஸ்..!

என் பிள்ளைங்க காதுகுத்துக்கு போகாதீங்க...வைரலாகும் போஸ்டர் மனைவியுடன் சண்டை போட்ட கணவர் ஒட்டிய வினோத நோட்டீஸ்..!


என் பிள்ளைங்க காதுகுத்துக்கு போகாதீங்க...வைரலாகும் போஸ்டர் மனைவியுடன் சண்டை போட்ட கணவர் ஒட்டிய வினோத நோட்டீஸ்..!

மனைவியுடன் சண்டை போட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் கணவர்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் மனைவியுடன் சண்டை என நோட்டீசே அடித்து ஒட்டி உறவுகளுக்கு தகவல் சொன்ன ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் தான் இப்படி ஒரு போஸ்டர். பொதுவாகவே கல்யாணம், காதுகாது, பிறந்தநாள் என நல்லநாள்களுக்கு மொய் வைப்பது தமிழகம் முழுவதும் உள்ள வழக்கம் தான். தென் மாவட்டங்களில் நடக்கும் பொய் விருந்து இதில் ரொம்ப ஸ்பெசல். அங்காளி, பங்காளி வீடுகளுக்கு நாம் செய்த மொய், முறைகளை திரும்ப வசூலிக்க மொய் விருந்து நடத்துவது வழக்கம். இதில் பழைய தான் செய்த மொய்யெல்லாம் ரிட்டர்ன் ஆகும்.

மதுரை செல்லூர் மேலத்தோப்பைச் சேர்ந்த கணபதி, அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார். இந்த தம்பதியரின் குழந்தைகளை கணபதியின் மனைவியே வளர்த்து வருகிறார். இந்த குழந்தைகளின் தாயும், கணபதியின் மனைவியும் இக்குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த ஏற்பாடு செய்தார்.

இதை கேள்விப்பட்ட கணபதி உடனே மதுரை மாநகர் முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், ‘’நான் எனது மனைவிய்சி பிரிஞ்சு வாழுறேன். எனது மாமனார், மாமியார் தூண்டுதலால் எனது சம்மந்தம் இன்றி இந்த காதணி விழா ஏற்பாடு நடக்குது. அதனால் நான் முறை செய்தவர்கள், எனக்கு திரும்ப முறை செய்வதாக எண்ணி அந்த காதணி விழாவுக்கு போயிடாதீங்க.”என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ஆயிரம் தான் குடும்ப பிரச்னைன்னாலும் நாலு சுவத்துக்குள்ள முடிக்கிறது தானே நியாயமாக இருக்கும்? என மதுரைவாசிகள் போஸ்டரை படித்துவிட்டு முணுமுணுக்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :