கணவரிடம் இந்த மாற்றமெல்லாம் தெரிந்தால் உஷாரா இருங்க பெண்களே...! Description: கணவரிடம் இந்த மாற்றமெல்லாம் தெரிந்தால் உஷாரா இருங்க பெண்களே...!

கணவரிடம் இந்த மாற்றமெல்லாம் தெரிந்தால் உஷாரா இருங்க பெண்களே...!


கணவரிடம் இந்த மாற்றமெல்லாம் தெரிந்தால் உஷாரா இருங்க பெண்களே...!

கற்பு என்பதே ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால் பொத்தாம் பொதுவாக அது பெண்களுக்கே உரியதாக்கி, எல்லை மீறும் ஆண்கள் பலர் உண்டு. ஆனால் ஒரு ஆண் வேறு பெண்களுடன் எல்லை மீறி பழகுகிறாரா என கணிப்பது பெண்களுக்கு மிகவும் எளிமையான விசயம் தான். அது எப்படி சாத்தியம் என்பவர்கள் தொடர்ந்து இதைப் படியுங்கள்...

திடீர் ட்ரிம்...தடாலடி ஜிம்..

உங்கள் கணவர் அதற்கு முன்னர் தனது தோற்றத்தைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் திடீர் என இரண்டு நாள் வளர்ந்த தாடியைக் கூட க்ளீன் சேவ் செய்தும், திடீர் ட்ரிம் செய்தும் மிளிர்வார். கண்ணாடி முன்பு மணிக்கணக்கில் நிற்பார். கிலோ கணக்கில் ஏறி இருந்த தொப்பையை அறுகம்புல் ஜீஸ் குடித்தும், ஜிம்மில் சேர்ந்தும் விருட்டென குறைக்கும் முனைப்பில் திடீர் அக்கறை செலுத்துவார். உஷார்...

நெருக்கம் குறையும்,..

வழக்கமாக உங்களிடம் காட்டிய நெருக்கம் குறைந்து, உங்கள் மேல் அடிக்கடி கோபப்படுவார். கட்டிய மனைவியிடம் சமையலில் தொடங்கி, அவரின் உடல் குண்டானது வரை தொடர் குறைகளை கண்டுபிடிப்பார். உங்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் கூட அது சரியில்லை...இது சரியில்லை என எரிந்து விழுவார். அதேபோல் வழக்கமான உங்கள் பெயரை படக்கென்று சொல்லி அழைப்பவர் மெல்ல, மெல்ல தன்னையறிமாமல் செகண்ட் சேனல் பெயரையும் சொல்லி முழுங்குவார் சுதாகரித்து!

நாட்டம் குறையும்..

வேறு பெண்ணுடன் பாலியல் ரீதியாக தொடர்பு ஏற்பட்டால் உங்களுடனான அவரது செக்ஸூவல் ரிலேசன்ஷிப் குறையும். இன்னும் சிலர் இருக்கிறார்கள். வழக்கத்துக்கு மாறாக மனைவியிடம் அன்பு மழை பொழிவார்கள். அவர்கள் செய்யும் தப்ப்புக்கு அது பிராய்ச்சித்தம் என அவர்களே நினைத்துக் கொள்வார்கள். வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் உங்கள் போன்கால்களை எடுக்க மாட்டார். வீட்டில் இருக்கும் போது போன் அடித்தாலே பதட்டமாவார். போனை பேச ஹலோ...ஹலோ என சொல்லிவிட்டே வீட்டுக்கு வெளியே போவார். முக்கியமாக கடைசியாக வந்த அழைப்பு எண்ணை அழித்து விடுவார்.

இப்போதே உங்கள் கணவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் துவங்குங்கள். இதில் சின்ன மாற்றத்தை உணர்ந்தாலும் உஷாரம்மா...உஷாரு...


நண்பர்களுடன் பகிர :