குட்பை சொன்ன முன்னணி தொகுப்பாளினி... பிரியாவிடை கொடுக்க வேண்டிய தருணத்தில் நெகிழும் ரசிகர்கள்..! Description: குட்பை சொன்ன முன்னணி தொகுப்பாளினி... பிரியாவிடை கொடுக்க வேண்டிய தருணத்தில் நெகிழும் ரசிகர்கள்..!

குட்பை சொன்ன முன்னணி தொகுப்பாளினி... பிரியாவிடை கொடுக்க வேண்டிய தருணத்தில் நெகிழும் ரசிகர்கள்..!


குட்பை சொன்ன முன்னணி தொகுப்பாளினி...  பிரியாவிடை கொடுக்க வேண்டிய தருணத்தில் நெகிழும் ரசிகர்கள்..!

டிவி, ரேடியோவை ஆன் செய்தால் ஆயிரக்கணக்கான தொகுப்பாளர்களை பல்வேறு நிகழ்ச்சிகளின் ஊடே பார்த்துவிட முடியும். ஆனால் அவற்றில் ரசிகர்களின் மனதில் நிற்கும் தொகுப்பாளர்கள் வெகு சிலர் தான். அவர்களில் ஒரு முக்கிய தொகுப்பாளர் தான் ரெகுலராக தொகுத்து வழங்கும் ஷோவுக்கு குட்பை சொல்லிவிட்டு கிளம்ப, அவரது ரசிகர்கள் சோகத்தில் உறைந்து போயுள்ளனர்.

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன் தாராவுக்கு டப்பிங் கொடுப்பவர் தீபா வெங்கட். நயனுக்கு வாய்ஸ் கொடுப்பது தொடங்கி, சின்னத்திரை, பெரியதிரை என அத்தனையிலும் ஜொலிக்கும் தீபா வெங்கட் ஹலோ எம்.எமில் தொகுப்பாளினியும் கூட! அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

ஹலோ எம்.எப் சென்னையில் மூன்றாம் பார்வை என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார் தீபா வெங்கட்.

இப்போது அவர் வெளியிட்டுருக்கும் வீடீயோ ஒன்றில், ‘’வீட்டில் எனக்கு இரு குட்டி தேவதைகள் இருக்கின்றன. அவர்களோடும், குடும்பத்தோடும் நேரத்தை செலவு செய்யவும், சொந்த காரணங்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்” என அம்மணி வீடீயோ போட, அவரது ரசிக கண்மணிகள் மிகுந்த சோகத்தில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :