நித்யானந்தா கெட்டப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சதீஸ்... ரகசியத்தை கசியவிட்ட நடிகர் ஜீவா...! Description: நித்யானந்தா கெட்டப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சதீஸ்... ரகசியத்தை கசியவிட்ட நடிகர் ஜீவா...!

நித்யானந்தா கெட்டப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சதீஸ்... ரகசியத்தை கசியவிட்ட நடிகர் ஜீவா...!


நித்யானந்தா கெட்டப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சதீஸ்...   ரகசியத்தை கசியவிட்ட நடிகர் ஜீவா...!

சந்தானம், சூரியைப் போல் தனக்கென சமகாலத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நகைச்சுவை நடிகர் தான் சதீஸ். அண்மையில் சிவகார்த்திகேயேனோடு சேர்ந்து இவர் நடித்த மிஸ்டர் லோக்கல் இப்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுபோக ஒரு டஜன் படங்களில் நடத்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஸ் தன் பிறந்தநாளை நித்தியானந்தா கெட்டப்பில் கொண்டாடி இருக்கிறார்.

நடிகர் சதீஸ் தன் பிறந்தநாளின் போது சூட்டிங்கில் இருந்தார். அந்த படத்தில் நடிகர் ஜீவா தான் நாயகன். சூட்டிங்கின் இடைவெளியில் தனது செல்போனில் செல்பி வீடீயோவை தட்டி விட்ட ஜீவா, இன்று சதீஸின் பிறந்தநாள் என வாழ்த்துச் சொல்லி விட்டு, தன் செல்போன் கேமராவை இன்னொரு பக்கத்தில் திருப்ப அங்கு நித்யானந்தா இருக்கிறார். ஒருமுறை கண்களை கசக்கிவிட்டு தெளிவாகப் பார்த்தால் அடடே...நம்ம காமெடியன் சதீஸ்...

ம்ம்ம்...நீங்க என்ன சொல்லுறீங்க என ஜீவா, சதீஸைக் கலாய்க்க, அதாவது என பெரிய தத்துவம் சொல்வது போல் இழுத்து விட்டு, நல்லா சந்தோஷமா இருக்கு. அவ்வளவு தான்” என ட்ரேட்மார்க் புன்னகையை உதிர்க்கிறார் சதீஸ்...

மிஸ் பண்ணாம வீடீயோ பாருங்க. அப்படியே நித்யானந்தாவையே பார்த்தது மாதிரி பீல் பண்ணுவீங்க...


நண்பர்களுடன் பகிர :