முதல் தேர்தலிலேயே அடிச்சு தூக்கிய கமல் கட்சி... பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி..! Description: முதல் தேர்தலிலேயே அடிச்சு தூக்கிய கமல் கட்சி... பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி..!

முதல் தேர்தலிலேயே அடிச்சு தூக்கிய கமல் கட்சி... பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி..!


முதல் தேர்தலிலேயே அடிச்சு தூக்கிய கமல் கட்சி...   பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி..!

கமல் கட்சி தொடங்கி ஓராண்டு தான் ஆகிறது. அதற்கு முன்னரும் கூட அரசியலில் வாய்ஸ் கூட கொடுத்திறாத கமல் தனது கன்னித் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யத்தை கில்லி அடிக்க வைத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 12 தொகுதிகளில் மக்கள் நீதிமய்யம் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. சில தொகுதிகளில் லட்சத்தையும் தாண்டிய வாக்கு எண்ணிக்கை பிரதான கட்சிகளையே நிலைகுலைய வைத்துள்ளது.

நடிகர் கமலஹாசன் தனது அபாரமான நடிப்பு, டெடிகேசனான உழைப்பினால் இந்தியா முழுமைக்கும் அறியப்படும் திரை நட்சத்திரம். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு அவர் பிக்பாஸ் என்னும் நிகழ்வைத் தொகுத்து வழங்கியதுதான் அவரது முதல் சின்னத்திரை விஜயம்/. அப்போது அந்த நிகழ்விலேயே கமல் அதிகமான அரசியல் விமர்சனங்களை எடுத்து வைத்தார். இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியையும் துவங்கினார்.

கட்சி துவங்கிய ஓராண்டுக்கு உள்ளேயே வந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்தே களம் கண்டது மக்கள் நீதி மய்யம். இதனால் கமல் கட்சி சோபிக்காது என்றே பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் கமல் கட்சி எந்த தொகுதியிலும் ஜெயிக்காவிட்டாலும் பல தொகுதிகளில் மிகப்பெரிய வாக்கு சதவிகிதத்தை தொட்டு இருக்கிறது.

வடசென்னை, மத்தியசென்னை, தென் சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, சேலம், மதுரை, திருவள்ளூர்,, புதுவை ஆகிய 11 தொகுதிகளில் 3ம் இடத்தையும், ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேலும் பெற்று இருக்கிறது. இதனால் நம்மவரும் ஏக உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்த சட்டசபைத்தேர்தலை நோக்கி உத்வேகத்தோடு இதனால் கமல் பயணிப்பார் என்பதை உறுதியாக நம்பலாம்.


நண்பர்களுடன் பகிர :