ஓட்டுப்போடாத மனைவி... ஓவென்று அழுத வேட்பாளர்... சொந்த குடும்ப உறுப்பினர்களே கைவிட்ட பரிதாபம்...! Description: ஓட்டுப்போடாத மனைவி... ஓவென்று அழுத வேட்பாளர்... சொந்த குடும்ப உறுப்பினர்களே கைவிட்ட பரிதாபம்...!

ஓட்டுப்போடாத மனைவி... ஓவென்று அழுத வேட்பாளர்... சொந்த குடும்ப உறுப்பினர்களே கைவிட்ட பரிதாபம்...!


ஓட்டுப்போடாத மனைவி... ஓவென்று அழுத வேட்பாளர்...  சொந்த குடும்ப உறுப்பினர்களே கைவிட்ட பரிதாபம்...!

தேர்தல் யுத்தம் என்பதே மக்களின் ஈர்ப்பை தங்கள் பக்கம் திருப்பி வாக்குகளை அறுவடை செய்வது தான். ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமே ஐந்து வாக்குகளை மட்டுமே பெற்ற ஒரு சுயேட்சை வேட்பாளரை அவரது குடும்பமே ஓட்டுப்போடாமல் புறக்கணித்ததுள்ள சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த நீது சட்டர்ன்வாலா என்பவர் தனது சொந்த தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். பிரதான கட்சிகள் போட்டியிடும் இந்த தேர்தலில் மரியாதைக்குரிய வாக்குகளையாவது பெறுவோம் என உறுதியாக நம்பினார். ஆயிரம் ஓட்டாவது கிடைக்கும் என வாக்கு எண்ணும் மையத்துக்கு ஆர்வமுடன் வந்து அமர்ந்தார். சிறிதுநேரத்தில் எல்லாம் அவர் அழத் தொடங்கினார்.

அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் ஏன் எனக் காரணம் கேட்டனர். ‘’எனது வீட்டிலேயே 9 ஓட்டு இருக்கு. ஆனா எனக்கு மொத்தமே 5 ஓட்டு தான் விழுந்துருக்கு. என் பொண்டாட்டி கூட ஓட்டுப் போடல. நான் ஜெயிக்கக் கூடாதுன்னு நடந்த சதி இது. நான் இனி மேல் தேர்தலிலேயே நிக்க மாட்டேன்..”என கதறிவாறு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே போனார்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


நண்பர்களுடன் பகிர :