திண்டுகல்லில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான்... வாங்கிய மொத்த ஓட்டு எவ்வளவு தெரியுமா? Description: திண்டுகல்லில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான்... வாங்கிய மொத்த ஓட்டு எவ்வளவு தெரியுமா?

திண்டுகல்லில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான்... வாங்கிய மொத்த ஓட்டு எவ்வளவு தெரியுமா?


திண்டுகல்லில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான்... வாங்கிய மொத்த ஓட்டு எவ்வளவு தெரியுமா?

இந்திய அளவில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தமிழகத்தில் பல பிரபலங்கள் இந்த தொகுதியில் போட்ட்டியிட்டனர். அதில் நடிகர் மன்சூர் அலிகானும் ஒருவர். அவர் எடுத்த ஓட்டுகள் குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தமிழகத்தில் திமுக, அதிமுக அணிகள் இடையே கடும்போட்டி நிலவியது. இவர்களைத் தொடர்ந்து புதிதாக துவங்கப்பட்ட கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அ.ம.மு.க, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்து களம் கண்டன. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபல திரைப்பட வில்லன் நடிகர் மன்சூன் அலிகான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார்.

அப்போது திண்டுக்கல்லில் தேர்தல் பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான் பல அட்ராசிட்டிகளை செய்தார். சந்தையில் போய் வியாபாரிகளோடு வியாபாரியாக காய்கறி விற்பது, ஹோட்டலில் புரோட்டா, பஜ்ஜி போடுவது, ஏன்...செருப்பு தைக்கும் வேலை கூட பார்த்து மக்களை தன் பக்கம் திருப்பினார்.

இவ்வளவும் செய்த மன்சூர் அலிகான் இந்த தொகுதியில் 28 ஆயிரம் ஓட்டுகள் பெற்றுள்ளார். திமுக வெற்றி பெற்ற இந்த தொகுதியில், பாமக இரண்டாம் இடமிடமும், கமலின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடமும் பிடிக்க, ஸ்டார் வேட்பாளரான மன்சூர் அலிகானை திண்டுக்கல் தொகுதி மக்கள் நான்காவது இடத்துக்கு தள்ளி விட்டுள்ளனர். இருந்தும் திரையில் வில்லனாக வரும் மன்சூர், தன் காமெடி அட்ராசிட்டியாலும், பிரச்சார யுத்தியாலும் 28 ஆயிரம் பேருக்கு ஹீரோவாகியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :