பவர் ஸ்டார்...இந்த தேர்தலில் வாங்கிய ஓட்டு தெரியுமா?போட்டியிட்ட பிரபலங்களின் தொகுதி எப்படி இருக்கிறது..! Description: பவர் ஸ்டார்...இந்த தேர்தலில் வாங்கிய ஓட்டு தெரியுமா?போட்டியிட்ட பிரபலங்களின் தொகுதி எப்படி இருக்கிறது..!

பவர் ஸ்டார்...இந்த தேர்தலில் வாங்கிய ஓட்டு தெரியுமா?போட்டியிட்ட பிரபலங்களின் தொகுதி எப்படி இருக்கிறது..!


பவர் ஸ்டார்...இந்த தேர்தலில் வாங்கிய ஓட்டு தெரியுமா?போட்டியிட்ட பிரபலங்களின் தொகுதி எப்படி இருக்கிறது..!

அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை ஆளும் திறத்துடன் புதிய அமைச்சரவையை அமைத்து மீண்டும் ஆட்சி செய்ய இருக்கிறது பாஜக. இந்த தேர்தலுக்கான வாக்குகளின் எண்ணிக்கை இப்போது எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பல விஜபிக்கள் போட்டியிட்டனர். அவர்கள் பெற்ற வாக்குகள் பற்றி தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்...

பிரகாஷ்ராஜ்...

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய பாஜக அரசுக்கு எதிராக பொதுவெளியில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் பிரகாஷ்ராஜ். கர்நாடகா மாநிலத்தில் உள்ள மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கினார். காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இவரைப் போட்டியிட அழைத்த போதும் மறுத்து விட்டார். இப்போது இவர் பின்னடைவில் இருக்கிறார்.

கமலதா அம்பரீஷ்: தெழுங்கு, கன்னடன்ம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர், பிரபல நடிகர் அம்பரீஷின் மனைவி. இவர் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டி போட்டார். இவரை எதிர்த்து கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்ட நிலையிலும் இவர் முன்னிலை வகித்து வருகிறார்.

பவர் ஸ்டார் : பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தென் சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவர் இதுவரை 113 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார்.

சன்னிதியோல்: பிரபலமான இந்தி நடிகையான இவர் பஞ்சாப் மாநுஇலம் குருதாஸ்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர் அங்கு முன்னிலை வகித்து வருகிறார்.

ஸ்மிருதி ராணி : இவர் ராகுலை எதிர்த்து களம் கண்டவர். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துத்தான் பிரபல்யமானார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுலையே பின்னுக்குத் தள்ளி, இந்த பாஜக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

நிகில் கொளடா : கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கொளடா கன்னடம், தெழுங்கு படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தின் ‘’மாண்டியா” தொகுதியில் போட்டியிட்ட இவர், இப்போது முன்னிலையில் இருக்கிறார்

ரவி கிஷன் : இந்து, தெழுங்கு, போஜ்புரி என பலமொழிகளில் நடித்தவர் ரவி கிஷன். உத்திரப்பிரதேசத்தில் கோராக்பூர் தொகுதியில் போட்டியிட்ட இவர் முன்னிலையில் உள்ளார்.

சத்ருகன் சின்கா : முன்னணி இந்தி நடிகர் சத்ருகன் சின்கா பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவர் முன்னிலையில் உள்ளார்.

ஹேமமாலினி..ஜெயப்பிரதா..ஊர்மிளா...

இந்தி திரையுலகில் உச்சத்தில் இருந்தவர் ஹேமமாலினி. உத்திரப்பிரதேசத்தின் மதுரா தொகுதியில் இவர் இப்போது முன்னிலையில் உள்ளார். தமிழ், தெழுங்கு, இந்தி, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரதா. இவர் பாஜக சார்பில் உத்திரப்பிரதேச ராம்பூரில் போட்டியிட்ட இவர் முன்னிலையில் உள்ளார். இந்தியன் படத்தில் முக்கிய ரோலில் வந்த ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் சார்பில் மும்பை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். இவரும் முன்னிலையில் உள்ளார்.


நண்பர்களுடன் பகிர :