அர்னாப் கோஸ்வாமியை கலாய்த்த சன்னி லியோன் : தேர்தல் நாளில் செமவைரலான சன்னிலியோன் ட்வீட்...! Description: அர்னாப் கோஸ்வாமியை கலாய்த்த சன்னி லியோன் : தேர்தல் நாளில் செமவைரலான சன்னிலியோன் ட்வீட்...!

அர்னாப் கோஸ்வாமியை கலாய்த்த சன்னி லியோன் : தேர்தல் நாளில் செமவைரலான சன்னிலியோன் ட்வீட்...!


அர்னாப் கோஸ்வாமியை கலாய்த்த சன்னி லியோன்  : தேர்தல் நாளில் செமவைரலான சன்னிலியோன் ட்வீட்...!

புயலே அடித்தாலும் சன்னிலியோனுக்கான ரசிகர்கள் அவருக்காக காத்திருப்பார்கள் என்றே புதுமொழி சொல்லும் அளவுக்கு அம்மணி பேமஸ். தேர்தல் தொடர்பாக தேர்தல் நாளில் அம்மணி செய்த ஒரு ட்வீட் தான் இன்று வாக்குகளின் முன்னிலையை விவரங்களையெல்லாம் கடந்து வைரல் ஆனது.

அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் நம் தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் இருபெரும் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸ்ம் போட்டி போட்டுக் கொண்டு பல விஜபிக்களை களத்தில் இறக்கியது. அதில் பாஜகவில் பிரபல பாலிவிட் நடிகர் சன்னி தியோலும் போட்டியிட்டார்.

காலை முதல் தொகுதிகளில் முன்னிலை நிலவரங்களை டிவி தொகுப்பாளர்கள் ஸ்பார்ட்டில் இருந்து லைவ் ரிலே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் பிரபல ஆங்கில ஊடக தொகுப்பாளர் அர்னாப், குர்தாஸ்பூரில் போட்டியிடும் சன்னிதியோல் முன்னிலை என்பதை தவறுதலாக சன்னிலியோன் முன்னிலை என கூறிவிட்டார்,. இதை அப்படியே கட் செய்து, வைரலாக்கினர் நம் சன்னிலியோன் ரசிகக் கண்மணிகள்.

இந்த வீடீயோ இணையத்தில் சுற்றிய வேகத்தில் சன்னிலியோன் கண்ணிலும் பட்டது. இதை அவர் பொம்மை நாக்கைத்தள்ளும் ஸ்மைலியுடன் ‘நான் எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன்?”என நகைச்சுவையாக ட்விட் செய்துள்ளார். ஒட்டுமொத்த இந்தியர்களின் ஓட்டும் உங்களுக்குத்தான் என நெட்டிசன்கள் பதிலுக்கு அன்பு மழை மொழிய இந்த ட்விட் தான் தேர்தல் முன்னிலை நிலவரங்களிலேயே டாப் ஹிட்!


நண்பர்களுடன் பகிர :