விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்... விக்ரம் பட ஹீரோயின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! Description: விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்... விக்ரம் பட ஹீரோயின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்... விக்ரம் பட ஹீரோயின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!


விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்...    விக்ரம் பட ஹீரோயின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

நடிகர் விக்ரமின் படத்தில் நடித்த ஹீரோயின் அந்த படத்தில் நான் விருப்பமே இல்லாமல் தான் நடித்தேன் என அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் விக்ரம், நடிப்பில் ஹரி இயக்கத்தில் மெகா ஹிட் ஆன படம் சாமி. காதல், ஆக்சன், செண்டிமெண்ட் என மசாலா கலந்து வந்த போலீஸ் படமான இது மகா, மெகா ஹிட் அடித்தது. இதில் விக்ரம், திரிஷா கெமிஸ்ட்ரியும் பெரிதாகப் பேசப்பட்டது. கிட்டத்தட்ட பத்து ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அதன் பாகம் இரண்டை எடுத்தார் இயக்குநர் ஹரி.

நாயகன் விக்ரமே தான். நாயகிக்கும் முதலில் த்ரிஷாவைப் பேசினர். ஆனால் கடைசி நேரத்தில் அவர் மறுத்துவிட்டார்.

இதனால் காக்காமுட்டை, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்நடித்தார். சாமி ஒன்றைப் போல், இரண்டு ஹிட் அடிக்கவில்லை. அதேபோல் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா, ‘’சாமி 2வில் நான் நடிக்க விரும்பவே இல்லை. ஆனால் விக்ரமும், ஹரியும் பர்சனலாக கேட்டதால் தான் ஒத்துகிட்டேன். வேறு நடிகைகள் ஒத்துக்க மறுப்பதாக அவர்கள் சொன்னதும் நடித்தேன்,”என சொல்லி இருக்கிறார்...

எல்லாம் சரி, சம்பளம் வாங்கிட்டு நடிச்சேன்னும் சொல்லியிருக்கலாம்!


நண்பர்களுடன் பகிர :