நேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...! Description: நேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...!

நேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...!


நேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...!

இந்தியாவில் சாலை விபத்துக்களுக்கு மட்டும் தான் பஞ்சம் இல்லை. அதிலும் பெரும்பாலான விபத்துகள் கவனமின்மையால் தான் நடக்கிறது. ஒரு நொடி அஜாக்கிரதை கூட உயிரிழப்புக்கே வழிவகுத்து விடுகிறது.

இதையெல்லாம் கட்டுப்படுத்தத்தான் காவல்துறை அனைவரையும் ஹெல்மெட் அணியச் சொல்லி அவ்வப்போது விழிப்புணர்வு ஊட்டுகிறது. ஆனால் பலரும் ஹெல்மெட் வைப்பதில் அஜாக்கிரதையாக இருப்பதும், அப்படியே ஹெல்மெட் இருந்தாலும் அதைத் தலையில் மாட்டாமல் வண்டியில் சும்மா வைத்துவிட்டு ஓட்டுவதும் தொடர்கிறது. இவர்கள் போலீஸாரைப் பார்த்தால் உடனே எடுத்து தலையில் மாட்டிக் கொள்கின்றனர்.

கேரளத்தில் அண்மையில் ஒரு பெரும் விபத்தை ஹெல்மெட் தடுத்து ஒருவரின் உயிரையே காப்பாற்றி இருக்கிறது. ஹெல்மெட் அணிந்த வாலிபர் ஒருவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதில் நேரே வேகமாக வந்து ஒரு சுவற்றில் போதுகிறார். இதில் தூக்கி வீசப்பட்டவர், ஒரு சுழற்று சுழட்டி கீழே விழுகிறார். ஹெல்மெட் போட்டு இருந்ததால் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

பார்த்தாலே பதட்டத்தை உருவாக்கும் இந்த வீடீயோவை வெளியிட்டு ஹெல்மெட்டின் அவசியத்தையும் ட்விட்டரில் போட்டுள்ளது கேரள காவல்துறை. வீடீயோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :