உலக அளவில் ரீச்சான தல பாட்டு... கண்ணாண கண்ணே பாடும் வெளிநாட்டுப் புள்ள...! Description: உலக அளவில் ரீச்சான தல பாட்டு... கண்ணாண கண்ணே பாடும் வெளிநாட்டுப் புள்ள...!

உலக அளவில் ரீச்சான தல பாட்டு... கண்ணாண கண்ணே பாடும் வெளிநாட்டுப் புள்ள...!


உலக அளவில் ரீச்சான தல பாட்டு... கண்ணாண கண்ணே பாடும் வெளிநாட்டுப் புள்ள...!

தூக்குத்துரைன்னா அடாவடி..ன்னு தொடங்கி தம்பி ராமையாவும், ரோபோ சங்கரும் விஸ்வாசம் படத்தில் அஜித் குறித்து சிலாகிப்பார்கள். அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை உண்மை, உழைப்பு, உயர்வு, தன்னம்பிக்கை இதெல்லாம் தான் தல. அவரை திரையில் பார்த்தாலே ஆடித் தீர்ப்பார்கள் ரசிகர்கள். இப்போது அஜித் பாடல் ஒன்று உலக அளவில் ரீச்சாக மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் விஸ்வாசம். இந்த ஆண்டின் பிரமாண்ட வெற்றிப் படமும் இதுதான். குடும்ப செண்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து தந்தை, மகள் பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த படம் சக்கை போடு போட்டது. அதிலும் இந்த படத்தில் இடம் பிடித்த கண்ணாண கண்ணே என்னும் பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது.

இப்போது இந்த பாடலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டே அயல்நாட்டு பெண் ஒருவர் பாடும் வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தல பொதுவாகவே உலக அளவில் ரீச் தான். அவரது படத்தின் பாடலும், வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாட உலக அளவில் ரீச் ஆகியுள்ளது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வீடீயோவில் வெளிநாட்டுப் பெண் பாடுவதைப் பாருங்களேன்..


நண்பர்களுடன் பகிர :