பிச்சை எடுத்து கல்வி வெளிச்சம் பாய்ச்சும் மாற்றுத்திறனாளி... பிச்சை எடுத்த காசில் படிக்க வைக்கும் ஆச்சர்யம்...! Description: பிச்சை எடுத்து கல்வி வெளிச்சம் பாய்ச்சும் மாற்றுத்திறனாளி... பிச்சை எடுத்த காசில் படிக்க வைக்கும் ஆச்சர்யம்...!

பிச்சை எடுத்து கல்வி வெளிச்சம் பாய்ச்சும் மாற்றுத்திறனாளி... பிச்சை எடுத்த காசில் படிக்க வைக்கும் ஆச்சர்யம்...!


பிச்சை எடுத்து கல்வி வெளிச்சம் பாய்ச்சும் மாற்றுத்திறனாளி... பிச்சை எடுத்த காசில் படிக்க வைக்கும் ஆச்சர்யம்...!

‘’கற்கை நன்றே..கற்கை நன்றே...பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அவ்வைப் பாட்டியார். அந்த வார்த்தைக்கு இணங்க தன் ஏழ்மையான நிலையிலும், வயோதிக மாற்றுத்திறனாளி ஒருவர் உண்மையிலேயே பிச்சை எடுத்து ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சந்தைக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அந்த காலத்திலேயே பி.ஏ பொருளாதாரம் படித்தவர். இவருக்கு இருகால்களுமே செயல்படாது. இதனால் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத அவர், பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் நடத்துகிறார்.

இதற்காக இவர் தினமும் காலையில் காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் வந்துவிடுகிறார். அங்கு இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளில் ஏறி, பிச்சை எடுக்கும் இவர், அந்த பணத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்களும் வாங்கிக் கொடுக்கிறார். இதேபோல் டியூசனும் எடுக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக பிச்சை எடுக்கும் செல்வராஜ், தனக்கு நெருக்கமானவர்களிடமும், நல்ல உள்ளம் கொண்டவர்களிடமும் இதேபோல் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவவும் கோரிக்கை வைத்து வருகிறார்.

அன்னச்சாவடிகள் ஆயிரம் கட்டுவதை விட, ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தல் உயர்ந்தது என்றார் பாரதியார். அந்தவகையில் அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாத நிலையிலும், பிச்சையெடுத்து பலரை படிக்க வைக்கும் செல்வராஜ் போன்ற நல்ல உள்ளங்களால் தான் இந்த உலகம் உயிர்ப்போடு இயங்குகிறது.


நண்பர்களுடன் பகிர :