தவறான நடத்தையால் பிறந்த குழந்தை.. மண்ணில் புதைத்த தாய்... தோண்டி காப்பாற்றிய நாய்! Description: தவறான நடத்தையால் பிறந்த குழந்தை.. மண்ணில் புதைத்த தாய்... தோண்டி காப்பாற்றிய நாய்!

தவறான நடத்தையால் பிறந்த குழந்தை.. மண்ணில் புதைத்த தாய்... தோண்டி காப்பாற்றிய நாய்!


தவறான நடத்தையால் பிறந்த குழந்தை.. மண்ணில் புதைத்த தாய்...    தோண்டி காப்பாற்றிய நாய்!

தவறான நடத்தையால் பதின் பருவத்திலேயே கர்ப்பம் தரித்த பெண், குழந்தை பிறந்ததும் அதை உயிரோடு மண்ணில் போட்டு புதைத்துள்ளார். இதை ஒரு நாய் மீட்டு குழந்தையை காத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் பேன்நாங் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறான நடத்தையினால் 15 வயதிலேயே கர்ப்பம் ஆனார். கர்ப்பமான காலத்தில் லாவகமாக அதை பெற்றோரிடம் இருந்து மறைத்தவர், குழந்தை பிறந்ததும் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்க கொஞ்சம் கூட கருணையின்றி அந்த பச்சைக் குழந்தையை குழி தோண்டி புதைத்துவிட்டார்.

பின்னர் எதுவுமே நடக்காதது போல் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உசா நிசாய்கா என்பவரது நாய் பிங்பாக் ஏதோ வழக்கத்துக்கு மாறாக குரைத்துக் கொண்டே மண்ணைத் தோண்டியது. அதைப் பார்த்துவிட்டு அது மண்ணை தோண்டும் பகுதிக்கு வந்து பார்த்தார். அப்போது குழந்தையின் கால் ஒன்று தெரிந்தது. உடனே அக்கம், பக்கத்தினர் சேர்ந்து அந்த குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றனர். இதனால் அந்த குழந்தை ஆரோக்கியமாக உடனே இயல்புநிலைக்கு திரும்பியது.

இதனைத் தொடர்ந்து பெற்ற பிள்ளையை மண்ணில் புதைத்த அந்த 15வயது தாயின் மீது, பச்சிளம் குழந்தையை கைவிடுதல், கொலை செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த 15 வயது பெண்ணின் பெற்றோரே அந்த பச்சிளம் குழந்தையை வளர்க்கத் துவங்கியுள்ளனர்.

புத்திசாலி நாய் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஜனன தினமே, அந்த பச்சிளம் குழந்தைக்கு மரணதினமாகவும் இருந்திருக்கும்!


நண்பர்களுடன் பகிர :